நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

98 லட்சம் ஆசிரியர்களுடன் 14.72 லட்சம் பள்ளிகள் 24.8 கோடி மாணவர்களுக்கு இந்திய பள்ளிக்கல்விமுறை சேவை செய்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 1:32PM by PIB Chennai

98 லட்சம் ஆசிரியர்களுடன் 14.72 லட்சம் பள்ளிகள் 24.8 கோடி மாணவர்களுக்கு இந்திய பள்ளிக்கல்விமுறை  சேவை செய்வதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் 69 சதவீதம் அரசுப் பள்ளிகளாகும். இந்தப் பள்ளிகளில் 50 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  51 சதவீத ஆசிரியர்கள் இவற்றில் பணிபுரிகின்றனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 22.5 சதவீதம் இருப்பதாகவும், இவற்றில் 32.6 சதவீத மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 38 சதவீத ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

2030-க்குள் 100 சதவீத மாணவர் சேர்க்கையை தேசிய கல்விக் கொள்கை 2020 நோக்கமாக கொண்டுள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. சமீப ஆண்டுகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2040-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், பல்துறை நிறுவனங்களாக மாற்றப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ  வெற்றிகரமாக அமலாக்க மத்திய, மாநிலஅரசுகள், யூனியன் பிரதேசங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை  அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்  காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097864

***

SMB/AG/DL


(Release ID: 2098212) Visitor Counter : 8