நிதி அமைச்சகம்
கொள்கை நடவடிக்கைகள் போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும்: பொருளாதார கணக்கெடுப்பு 2024-25
प्रविष्टि तिथि:
31 JAN 2025 1:28PM by PIB Chennai
2047-ம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறும் நாட்டின் லட்சியம், அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட தொலைநோக்காகும். 2024-25-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இதனைப் பிரதிபலிக்கிறது.
தனிநபர் கார்பன் உமிழ்வு மிகவும் குறைவாக இருந்தபோதிலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில், குறைந்த விலையிலான எரிசக்தி பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளதுடன் மட்டுமல்லாமல், வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை கொண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
2070-ம் ஆண்டு வாக்கில் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவதற்கு முன்னுரிமை அடிப்படையிலான முதலீட்டை ஈர்ப்பது அவசியமாகும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. புதைபடிவ எரிபொருட்களுக்கு நம்பகமான மாற்றாக அணுசக்தி திகழ்கிறது மென்மையான மாற்றத்தை எளிதாக்குவதற்கு முன்னோக்கிய பார்வை தேவை என ஆய்வறிக்கை கூறுகிறது.
பேட்டரி சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளுடன் தொடர்புடைய கழிவுகளை நிலையான முறையில் அகற்றுவதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவையும் முக்கியமானவை என அது கூறுகிறது. வாழ்வியல் இயக்கத்தை விரிவான பொதுமக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தும் பொருளாதார ஆய்வறிக்கை இதற்கு விரிவான விழிப்புணர்வு இயக்கம் அவசியம் என்று கூறுகிறது.
***
PKV/RR/DL
(रिलीज़ आईडी: 2098177)
आगंतुक पटल : 100