தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா 2025-ன் கண்கவர் காட்சியைப் படம்பிடித்தது

प्रविष्टि तिथि: 27 JAN 2025 5:46PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய  அளவில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வான மகா கும்பமேளா 2025, தரையில் இருந்து மட்டுமல்ல, விண்வெளியிலிருந்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை இரவு, சர்வதேச விண்வெளி நிலையம் மகா கும்பமேளாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் படங்களாக எடுத்தது. இந்தப் படங்கள் நிகழ்வின் பிரம்மாண்டத்தை  வெளிப்படுத்துகின்றன. கங்கை நதிக்கரையில் ஒளிரும் விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று கூடலை இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. விண்வெளி வீரர் டான் பெட்டிட், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த படங்களை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மகா கும்பமேளாவின் விளக்குகளின் பிரம்மாண்டத்தையும், கங்கை நதிக்கரையை ஒரு தனித்துவமான காட்சியாக மாற்றும் பெரும் மக்களின் ஒன்று கூடலையும் படங்கள் காட்டுகின்றன. இந்த மகா கும்பமேளா  உலகின் மிகப்பெரிய மத நிகழ்வாகும். அங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக அமைதியை அடைய கங்கை நதியில் நீராடுகிறார்கள். இதுவரை, 13 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இங்கிருந்து வெளிவரும் காட்சிகள் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096739

***

TS/IR/RJ/DL


(रिलीज़ आईडी: 2096777) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam