ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா 2025: தூய்மை கங்கை இயக்க அரங்கமானது கங்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மையமாக அமைந்துள்ளது

Posted On: 23 JAN 2025 11:03AM by PIB Chennai

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் அமைக்கப்பட்டுள்ள தூய்மை கங்கை இயக்க அரங்கு, ஒவ்வொரு நாளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. கங்கை நதியில் அரசு மேற்கொண்டுள்ள தூய்மை முயற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு புதுமையான பிரச்சார ஊடகமாக இந்த அரங்கம் மாறியுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு கங்கையின் பல்லுயிர்த்தன்மை மற்றும் இயற்கை அழகின் அனுபவத்தை வழங்குகிறது. நவீன காட்சி தொழில்நுட்பத்துடன்    இந்த அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. கங்கைக் கரையில் வாழும் பறவைகளின் காட்சியையும் ஒலியையும் துல்லியமாக இந்த அரங்கம் காட்சிப்படுத்தியுள்ளது.

அரங்கின் முக்கிய ஈர்ப்பு டிஜிட்டல் கண்காட்சி ஆகும். இது கங்கையின் தூய்மை தொடர்பான பல்வேறு முயற்சிகளை ஈடுபாட்டுடனும் கல்வி ரீதியாகவும் முன்வைக்கிறது. கங்கை-யமுனை நதிகள், அவற்றின் துணை நதிகள் குறித்த தரவுகளைக் காண்பிக்கும் தளம் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்தத் தளம் நீர் நிலைகள், தூய்மை, மாசு தொடர்பான புள்ளிவிவரங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

இந்த அதிநவீன, ஆக்கப்பூர்வமான அரங்கு கங்கை நதியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மகா கும்பமேளாவின் முக்கிய பார்வை இடங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

***

(Release ID: 2095341)

TS/PLM/AG/KR


(Release ID: 2095496) Visitor Counter : 18