உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் - காரணங்களைக் கண்டறிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவு

Posted On: 18 JAN 2025 7:04PM by PIB Chennai

 

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் கடந்த ஆறு வாரங்களில்  3 சம்பவங்களில் ஏற்பட்ட இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிய பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் சுகாதார - குடும்ப நல அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ரசாயனம் - உரத் துறை அமைச்சகம்  நீர்வள அமைச்சகம் ஆகியவற்றின் நிபுணர்கள் இருப்பார்கள். மேலும், கால்நடை பராமரிப்பு, உணவு பாதுகாப்பு  தடய அறிவியல் ஆய்வகங்களைச் சேர்ந்த நிபுணர்களும் குழுவுக்கு உதவுவார்கள்.

இந்த குழு ஜனவரி 19-ம் தேதி அங்கு சென்று உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து உடனடி நிவாரணம் வழங்குவதிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயலாற்றும்.

நிலைமையை சமாளிக்கவும், இறப்புகளுக்கான காரணிகளைப் புரிந்துகொள்ளவும் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சில நிறுவனங்களின் நிபுணர்கள் செயலாற்றி வருகின்றனர்.

***

PLM/KV

 

 


(Release ID: 2094116) Visitor Counter : 34