உள்துறை அமைச்சகம்
குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
15 JAN 2025 5:52PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் வாத்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம், பிரேர்னா வளாகம் மற்றும் விளையாட்டு வளாகத்தை நாளை (2025 ஜனவரி 16-ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த தருணத்தில், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்கிறார். வாத்நகரில் அமைக்கப்பட உள்ள பாரம்பரிய வளாக மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாடு, அழகுபடுத்தல் திட்டம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிக்கும் அமைச்சர் தலைமை தாங்குகிறார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயணம் குறித்த குறும் படத்தையும் திரு அமித் ஷா வெளியிடுகிறார்.
12,500 சதுர மீட்டர் பரப்பளவில் 298 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகமானது வாத்நகரின் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான கலாச்சார வரலாற்றையும் அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் மூலம் அங்கு தொடர்ச்சியாக மனிதர்கள் வசித்து வந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இத்தகைய முதல் அருங்காட்சியகம் இதுவாகும். இங்கு பார்வையாளர்கள் ஒரு தொல்பொருள் தளத்தில் பங்கேற்றது போன்ற ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுவார்கள். இந்த அருங்காட்சியகத்தில் பீங்கான் பொருட்கள், சிப்பி உற்பத்தி, நாணயங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கருவிகள், சிற்பங்கள், விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் உணவு தானியங்கள், டி.என்.ஏ எலும்புக்கூடு எச்சங்கள் போன்ற கரிம பொருட்கள் உட்பட 5000- க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒன்பது கருப்பொருள் காட்சியகங்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் 4,000 சதுர மீட்டர் அகழ்வாராய்ச்சி தளமும் உள்ளது. அங்கு தொல்பொருள் எச்சங்கள் 16-18 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. அகழ்வாராய்ச்சி தளத்தில் ஒரு அனுபவ நடைபாதை கொட்டகை பார்வையாளர்களை அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் கண்டுபிடிப்புகளை ஆராயவும் பார்வையிடவும் அனுமதிக்கிறது.
இந்த வளாகத்தில் ஒரு செயற்கை தடகள பாதை, ஒரு ஆஸ்ட்ரோ டர்ஃப் கால்பந்து மைதானம் மற்றும் கபடி, கைப்பந்து மற்றும் கோ-கோ போன்ற பாரம்பரிய மண் சார்ந்த விளையாட்டுகளுக்கான மையங்களும் உள்ளன. கூடுதலாக, பூப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஜூடோ, உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றிற்கான பல்நோக்கு உள்ளரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 100 சிறுவர்கள் மற்றும் 100 சிறுமிகளுக்கான தங்குமிடங்களுடன் 200 படுக்கைகள் கொண்ட விடுதியும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093139
----
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2093217)
आगंतुक पटल : 76