பிரதமர் அலுவலகம்
ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இந்திய ராணுவமானது உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழ்கிறது: பிரதமர்
ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
15 JAN 2025 9:18AM by PIB Chennai
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம்" என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ராணுவ தினமான இன்று, நமது நாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத தைரியத்திற்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் துணிச்சலான வீரர்களின் தியாகங்களையும் நாம் நினைவில் கொள்கிறோம்.”
***
TS/BR/KV
(रिलीज़ आईडी: 2092997)
आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam