மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி ஆலையை திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்


ஆரம்பத்தில் ஆண்டுக்கு 1,00,000 மடிக்கணினிகள் உற்பத்தி செய்யப்படும் : அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்டுகள் வரை தயாரிக்க திட்டம்

Posted On: 11 JAN 2025 2:20PM by PIB Chennai

 

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் புதிய அதிநவீன மடிக்கணினி தயாரிக்கும் ஆலையை இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஏற்றுமதி மண்டலத்தில் (MEPZ) அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி வன்பொருள் உற்பத்திக்கான பி.எல்.ஐ 2.0 திட்டத்தின் கீழ், சிர்மா எஸ்.ஜி.எஸ், நிறுவனம் சென்னையில் தைவான் நாட்டின் மைக்ரோ ஸ்டார் இன்டர்நேஷ்னல் நிறுவனத்திற்காக, புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக இருந்து, மடிக்கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான முயற்சியை இது குறிக்கிறது. உயர்தர தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிறுவனம் வலுப்படுத்தும்.

தைவான் நாட்டின் மைக்ரோ-ஸ்டார் இன்டர்நேஷனலுக்காக (எம்எஸ்ஐ) மடிக்கணினிகளைத் தயாரிக்க தைவானை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோ-ஸ்டார் இன்டர்நேஷனலுடன் (எம்எஸ்ஐ) சிர்மா எஸ்ஜிஎஸ் கூட்டு சேர்ந்துள்ளது.

 

இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 100,000 மடிக்கணினிகள் என்னும் ஆரம்ப உற்பத்தி திறனுடன் தொடங்குகிறது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேவையின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யப்படும்.

இந்த விரிவாக்கம் 2026-ம் நிதியாண்டுக்குள் 150 முதல் 200 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் பிராந்திய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்.

உலகத் தரம் வாய்ந்த மடிக்கணினிகளை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட சிர்மா எஸ்ஜிஎஸ் நிறுவனம் செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. அஸ்வினி வைஷ்ணவ், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்து உலக சந்தையில் விற்பனை செய்வது என்ற நோக்கம் நிறைவேறி வருவதாகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

***

PKV/KV


(Release ID: 2092070) Visitor Counter : 34