எஃகுத்துறை அமைச்சகம்
45,000 டன் எஃகு மூலம் மகா கும்பமேளா 2025-ஐ செயில் நிறுவனம் வலுப்படுத்துகிறது
Posted On:
09 JAN 2025 2:50PM by PIB Chennai
மகாரத்னா மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய எஃகு தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம் (செயில்), பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள வரவிருக்கும் மகாகும்பமேளா 2025-க்கு சுமார் 45,000 டன் எஃகு வழங்கியுள்ளது. முன்னதாக, 2013 ஆம் ஆண்டின் மஹாகும்பமேளாவின் போது செயில் எஃகு வழங்கியது. இது பொது நிகழ்வுக்கு நிறுவனத்தின் நிலையான ஆதரவை நிரூபிக்கிறது.
மஹாகும்பமேளா 2025-ஐ சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான பல்வேறு தற்காலிக கட்டமைப்புகளை நிர்மாணிப்பதில் செயில் வழங்கும் எஃகு முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் பாண்டூன் பாலங்கள், பாதை, தற்காலிக எஃகு பாலங்கள், துணை மின்நிலையங்கள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவை அடங்கும். இந்த எஃகு விநியோகத்திற்கான முக்கிய வாடிக்கையாளர்களில் பொதுப்பணித் துறை, உத்தரபிரதேச மாநில பாலங்கன் கழகம், மின்சார வாரியம் மற்றும் அவற்றின் சப்ளையர்கள் அடங்குவர்.
நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இதுபோன்ற பெரிய அளவிலான நிகழ்வுக்கு எஃகு மூலம் பங்களிப்பு செய்வதில் செயில் பெருமிதம் கொள்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும், அதன் கலாச்சார மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் தேசிய திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களிக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
***
TS/PKV/KV/KR
(Release ID: 2091442)
Visitor Counter : 30