கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா 2025-ல் மருத்துவ சேவைகள்

Posted On: 08 JAN 2025 5:03PM by PIB Chennai

பிரயாக்ராஜில் 2025 மகா கும்பமேளாவில் தொலைநோக்குப் பார்வையுடன் சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, மகா கும்பமேளா ஆன்மீக புத்துணர்ச்சியை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வரும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களுக்கு இணையற்ற மருத்துவ சேவையையும் வழங்குகிறது. வலுவான திட்டமிடல், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், மாநில அரசு இந்த மாபெரும் ஆன்மீகச் சந்திப்பை ஆரோக்கியத்தின் கலங்கரை விளக்கமாக மாற்றியுள்ளது.

மகா கும்பமேளாவின் சுகாதார முயற்சிகளின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் பார்வைக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியான நேத்ரா கும்பமேளா (கண் கண்காட்சி) ஆகும். 3,00,000 கண்கண்ணாடிகளை விநியோகிப்பதும் 5,00,000 புற நோயாளிகள் முகாம்கள் நடத்துவதும் இந்த நிகழ்வின் லட்சிய இலக்கில் அடங்கும், இதில் யாத்ரீகர்கள் முறையான கண் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

சில வாரங்களாக பரேட் மைதானத்தில் உள்ள மத்திய மருத்துவமனை, மகா கும்பமேளாவின் மருத்துவ வசதிகளின் முக்கிய மையமாக உள்ளது. 100 படுக்கைகளுடன், இது ஆலோசனைகள் முதல் அவசர கால சிகிச்சை பராமரிப்பு வரை பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. மருத்துவமனை ஏற்கனவே வெற்றிகரமாக 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஆண்டின் முதல் நாளில் மட்டும், 900 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்,

மகா கும்பமேளா ஒரு ஆன்மீக பயணத்துடன் மருத்துவச் சேவைகளையும் வழங்குகிறது. புனித நதிகளின் ஓட்டத்துடன், மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான இடமாகவும் இந்த கும்பமேளா அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091178  
 

***

TS/PLM/RS/DL


(Release ID: 2091230) Visitor Counter : 15