பிரதமர் அலுவலகம்
சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்
Posted On:
02 JAN 2025 10:23AM by PIB Chennai
சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.) பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார்.
"ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி மற்றும் செழிப்பை மேலும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது."
***
TS/PKV/KV/KR
(Release ID: 2089511)
Visitor Counter : 52
Read this release in:
Assamese
,
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam