மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 JAN 2025 3:28PM by PIB Chennai

விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில்  ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

பி&கே உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலனை உறுதியாக வைத்திருப்பதில் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை மாற்றாமல் வைத்திருப்பதில் மத்திய அரசு விவசாயிகளுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. புவிசார் அரசியல் தடைகள் மற்றும் உலகளாவிய சந்தை நிலைமைகளின் நிலையற்ற தன்மை இருந்தபோதும், 2024-25 கரீஃப் மற்றும் ரபி பருவங்களுக்கு மலிவு விலையில் விவசாயிகளுக்கு டிஏபி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உகந்த அணுகுமுறையை அரசு கடைப்பிடித்தது.  01.04.2024 முதல் 31.12.2024 வரை தோராயமாக ரூ.2,625 கோடி செலவினத்துடன் என்.பி.எஸ் மானியம் ரூ.3,500 க்கு அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்புக்கு அமைச்சரவை 2024 ஜூலையில் ஒப்புதல் அளித்திருந்தது.

***


TS/SMB/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2089376) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Nepali , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam