மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்' என்ற புத்தகத்தை திரு அமித் ஷா புதுதில்லியில் நாளை வெளியிடுகிறார்

Posted On: 01 JAN 2025 4:58PM by PIB Chennai

நாளை(ஜனவரி 2, 2025) புதுதில்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குவார். மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்

'ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்' (காலந்தோறும் -ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் கதையை சித்தரிக்கிறது. இந்தப் புத்தகமானது பாடநிபுணர்களும் அறிமுகம் இல்லாதவர்களும் என  இரு சாராரும் புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்நூல் பிராந்தியத்தின் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை  ஏழு பிரிவுகளாக பிரித்து வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு விளக்கப்படமும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதித்துவமாகவும், அதன் முக்கியத்துவத்துடனும், இந்திய வரலாற்றின் பரந்த வரலாற்று களஞ்சியத்திற்கு பங்களிப்பாகவும் கவனமாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் இந்த புத்தகம், இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகும்.

***

(Release ID: 2089239)
TS/SMB/RR/KR

 


(Release ID: 2089336) Visitor Counter : 40