பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 DEC 2024 11:28PM by PIB Chennai

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இது நம் அனைவருக்கும் – நமது சக நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கும் மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும். ஜனநாயகத்தின் திருவிழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகாலப் பயணம்  குறிப்பிடத்தக்க ஒன்றாகும்‌‌.  மேலும் இந்தப் பயணத்தின் மையத்தில் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தெய்வீகப் பார்வை உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் நாம் முன்னேறும்போது தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவது உண்மையிலேயே ஒரு முக்கியமான தருணமாகும். இந்தக் கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்றமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

75 ஆண்டுகளை நிறைவு செய்த சாதனை சாதாரண சாதனை அல்ல; இது அசாதாரணமானது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் எதிர்காலம் குறித்து பல சந்தேகக் கணிப்புகள் இருந்தன. இருப்பினும், இந்திய அரசியலமைப்பு அத்தகைய சந்தேகங்கள் அனைத்தையும் செல்லாததாக்கிவிட்டது. இன்று நாம் எங்கு நிற்கிறோம் என்பதற்கும் வழிகாட்டியது. இந்த மகத்தான சாதனைக்காக, நான் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களையும் கௌரவிக்கிறேன். அவர்கள் இந்த நாட்டின் உணர்வை பிரதிபலித்து, இந்தப் புதிய அமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளில், அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வையை பாரதத்தின் மக்கள் மதித்துள்ளனர், ஒவ்வொரு சோதனையையும் எதிர்கொண்டு நெகிழ்ச்சியுடன் நிற்கிறார்கள். இதற்காக, அவர்கள் மிக உயர்ந்த பாராட்டுக்குத் தகுதியானவர்களாக உள்ளனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அதை ஆழமாக அறிந்திருந்தனர். பாரதம் 1947-ல் பிறந்தது என்றோ அல்லது 1950-ல் இங்கு ஜனநாயகம் தொடங்கியது என்றோ அவர்கள் நம்பவில்லை. மாறாக, இந்தியாவின் பண்டைய மரபுகள், அதன் ஆழமான கலாச்சாரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான அதன் பாரம்பரியம் ஆகியவற்றின் மகத்துவத்தை அவர்கள் அங்கீகரித்தனர். இந்தத் தொடர்ச்சியை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள். அதன்மீது கட்டமைக்க முனைந்தார்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் குடியரசு கடந்து வந்த காலம் அசாதாரணமானது. உலகிற்கு உத்வேகம் அளிப்பதாக அது இருந்தது. இதன் காரணமாகவே இந்தியா இன்று ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. நாம் வெறுமனே ஒரு பரந்த ஜனநாயக நாடு மட்டுமல்ல; நாம்தான் அதன் தோற்றம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இதைச் சொல்லும் போது, மூன்று மாபெரும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களின் வார்த்தைகளை இந்த அவையின் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, ராஜரிஷி புருஷோத்தம் தாஸ் டாண்டன் அவர்கள், அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நமது நாடு மீண்டும் இதுபோன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த ஒன்றுகூடல் நமது புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவூட்டுகிறது, நாம் சுதந்திரமாக இருந்த காலங்கள், அறிஞர்கள் ஒன்று கூடி நாட்டின் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இரண்டாவது மேற்கோள், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மாபெரும் தேசத்திற்கு குடியரசு முறை ஒன்றும் புதிதல்ல - அது வரலாற்றின் விடியலில் இருந்தே தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.

மூன்றாவது, பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களிடமிருந்து, ஜனநாயகம் என்பது இந்தியாவிற்கு அந்நியமான கருத்தாக்கம் அல்ல என்று அறிவித்தார். இந்த நிலத்தில் பல குடியரசுகள் செழித்தோங்கிய ஒரு காலம் இருந்தது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயல்முறையில் இந்த நாட்டின் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் உள்ளது. அரசியல் நிர்ணய சபையில் 15 கௌரவமான பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் செயல்பாட்டில் பங்கு வகித்தனர். விவாதங்களை அவர்களின் அசல் முன்னோக்குகளுடன் வளப்படுத்தினர். இந்தப் பெண்கள் பல்வேறு பின்னணிகள் மற்றும் துறைகளிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். மேலும் அவர்களின் பரிந்துரைகள் அரசியலமைப்பை வடிவமைப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பல நாடுகள் பெண்களுக்கு உரிமைகளை வழங்க பல தசாப்தங்கள் எடுத்துக்கொண்டாலும், இந்தியா அதன் அரசியலமைப்பின் தொடக்கத்திலிருந்தே அவர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்தது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சமீபத்திய ஜி-20 உச்சிமாநாட்டின் போது, நமது அரசியலமைப்பின் இந்த உணர்வை நாம் உயர்த்திப் பிடித்தோம். இந்தியாவின் தலைமையின் கீழ், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினோம். வெறுமனே பெண்களின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஒரு மாற்றத்தை வலியுறுத்தினோம். இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த அர்த்தமுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாரி சக்தி வந்தன் (மகளிருக்கு இடஒதுக்கீடு) சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி, இந்திய ஜனநாயகத்தில் பெண்களின் அதிகப் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்திருக்கிறோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இன்று, அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, ஒவ்வொரு பெரிய முன்முயற்சியின் மையத்திலும் பெண்கள் உள்ளனர். இந்த வரலாற்று மைல்கல்லின் போது, ஒரு பழங்குடியினப் பெண் இந்தியாவின் மதிப்புமிக்க குடியரசுத் தலைவர் பதவியை வகிக்கிறார் என்பது ஒரு பெரிய தற்செயல் நிகழ்வாகும். இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு ஒரு உண்மையான சான்றாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த அவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அவர்களின் பங்களிப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அமைச்சரவையிலும் அவர்களின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. இன்று, சமூகத் துறை, அரசியல், கல்வி, விளையாட்டு அல்லது படைப்புத் துறைகள் என எதுவாக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு தேசத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, குறிப்பாக அறிவியலில், அவர்களது குறிப்பிடத்தக்க சாதனைகளை, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதத்துடன் அங்கீகரிக்கிறார்கள். இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள மிகப்பெரிய உத்வேகம் நமது அரசியலமைப்புச் சட்டம்தான்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்தியா இப்போது முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதை நோக்கி நாடு வலுவான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மேலும், நமது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்பது 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதிமொழியாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வை ஒவ்வொரு இந்தியரின் கனவாகும். இருப்பினும், இந்த இலக்கை அடைவதற்கான மிக முக்கியமான முன்நிபந்தனை இந்தியாவின் ஒற்றுமையாகும், அதை நமது அரசியலமைப்பு அதன் அடித்தளமாக உயர்த்திப் பிடிக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலாளர் தலைவர்கள், விவசாயிகளின் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகள் என இந்த நாட்டின் தலைவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்காக அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் ஒன்றிணைந்தனர். நாட்டின் பல்வேறு துறைகள் மற்றும் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்திய இவர்கள், இந்த ஒற்றுமையின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்திருந்தனர். பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் இந்தச் சவாலை முன்கூட்டியே உணர்ந்து, ஒரு ஆழ்ந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார், அதைப் படிக்க விரும்புகிறேன். அவர் கூறினார்: "பலதரப்பட்ட இந்திய மக்களை எவ்வாறு ஒன்றிணைப்பது, ஒருவருக்கொருவர் இணக்கமான முடிவுகளை எடுக்க நாட்டு மக்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதுதான் பிரச்சனை; இவ்வாறு இணக்கமாக இருந்தால்தான் நாட்டில் ஒற்றுமை உணர்வை நிறுவ முடியும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தங்கள் இதயங்களிலும் மனதிலும் ஒற்றுமையைக் கொண்டிருந்தனர்.  ஆனால் இந்த ஒற்றுமை பின்னர் சிதைந்த மனநிலை அல்லது சுயநல நோக்கங்களால் தாக்கப்பட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் கூற விரும்புகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது எப்போதும் இந்தியாவின் பலமாக இருந்துள்ளது. நாம் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறோம், இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதில் தேசத்தின் முன்னேற்றம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காலனிய அடிமை மனப்பான்மையால் கட்டுண்டவர்கள், இந்தியாவின் நலனைப் பாராட்ட முடியாதவர்கள், இந்தியா 1947-ல் பிறந்தது என்று நம்பியவர்கள், நமது வேற்றுமையில் உள்ளார்ந்த ஒற்றுமையைக் காணத் தவறிவிட்டனர். இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் அதில் வேற்றுமை விதைகளை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை நமது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு செய்வது பாபா சாஹேப் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியல் சாசனம் தொடர்பாக எனது கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில், இந்த நாட்டு மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர். எங்களது கொள்கைகள் மற்றும் முடிவுகளை மறுஆய்வு செய்யும் போது, இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்பது தெளிவாகிறது.

உதாரணமாக, 370-வது பிரிவு தேசிய ஒற்றுமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையாக மாறியிருந்தது. இது அகற்றப்பட வேண்டிய ஒரு தடையாகும். நமது அரசியலமைப்பின் உணர்வால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து, 370-வது பிரிவை அகற்றினோம், நமது தேசத்தின் ஒற்றுமையை உறுதி செய்வது நமது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்தியா போன்ற அளவில் உள்ள ஒரு நாடு பொருளாதார ரீதியாக முன்னேறவும், உலகளாவிய முதலீட்டை ஈர்க்கவும், அதற்கு சாதகமான அமைப்புகள் தேவை. பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி அறிமுகம் அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாகும். பொருளாதார ஒற்றுமையை வளர்ப்பதில் ஜிஎஸ்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த விஷயத்தில் முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சிகளை  பாராட்ட வேண்டும். எங்கள் பதவிக் காலத்தில், இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்தது, நாங்கள் அதைச் செய்தோம். "ஒரே நாடு, ஒரே வரி" என்ற கோட்பாடு அந்தப் பங்கை முன்னெடுத்துச் செல்கிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ரேஷன் கார்டு எப்போதும் ஏழைகளுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இருப்பினும், முன்பு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் ஒரு ஏழை நபர் அதன் நன்மைகளை பெற முடியாது. நம்மைப் போன்ற பரந்து விரிந்த நாட்டில், ஒவ்வொரு குடிமகனுக்கும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், சம உரிமை இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த, "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற கருத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சாதாரண மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, இலவச சுகாதாரத்திற்கான அணுகல், வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான அவர்களின் திறனைப் பலப்படுத்துகிறது. இருப்பினும், சுகாதார அணுகல் அவர்கள் எங்கிருந்தாலும், குறிப்பாக அவசர காலங்களில் கிடைக்க வேண்டும். தங்கள் சொந்த மாநிலத்திலிருந்து விலகி வேலை செய்யும் ஒரு நபர் வாழ்க்கை அல்லது இறப்பு சூழ்நிலையை எதிர்கொண்டால், சுகாதார சேவைகளை அணுக முடியாவிட்டால், அமைப்பு அதன் நோக்கத்தில் தோல்வியடைகிறது. தேசிய ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் "ஒரே நாடு, ஒரே சுகாதார அட்டை" முன்முயற்சியை நாங்கள் செயல்படுத்தினோம். இன்று, பீகாரின் தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புனேயில் பணிபுரிந்து நோய்வாய்ப்பட்டாலும், அவர்களின் ஆயுஷ்மான் அட்டை உடனடியாக சுகாதார சேவைகளை அணுகிப் பெறுவதை உறுதி செய்கிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஒரு பகுதியில் மின்சாரம் இருந்து, மற்றொரு பகுதியில் மின்சாரம் இல்லாததால், இந்தியாவின் சில பகுதிகள் இருளில் மூழ்கிய பல நிகழ்வுகள் நம் நாட்டு வரலாற்றில் நடந்துள்ளன. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில், இதுபோன்ற மின் பற்றாக்குறை பெரும்பாலும் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து இந்தியாவை மோசமாகச் சித்தரித்தது. அந்த நாட்களை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், அரசியலமைப்பின் உணர்வால் ஈர்க்கப்பட்டு, ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, "ஒரே நாடு, ஒரே தொகுப்பு" என்ற அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இன்று, மின்சாரம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் தடையின்றிச் சென்றடைகிறது, எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்கிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது நாட்டின் உள்கட்டமைப்பு நீண்ட காலமாக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சமமான மற்றும் சமச்சீரான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறோம். வடகிழக்கு, ஜம்மு-காஷ்மீர், இமயமலைப் பகுதிகள் அல்லது பாலைவனப் பகுதிகள் ஆகட்டும், அனைத்து பிராந்தியங்களிலும் உள்கட்டமைப்புக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். வளங்களின் பற்றாக்குறை காரணமாக பிளவுகள் உருவாக்கும் இடைவெளிகளை அகற்றுவதும், சமமான வளர்ச்சியின் மூலம் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதும் எங்கள் குறிக்கோள் ஆகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காலங்கள் மாறிவிட்டன, டிஜிட்டல் துறை "இருப்பவர்கள்" மற்றும் "இல்லாதவர்கள்" என்ற சாம்ராஜ்யமாக மாறாது என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா முயற்சி உலகளாவிய வெற்றிக் கதையாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியதன் மூலம், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நாம் நிலைநிறுத்தியுள்ளோம். 'இந்தியாவின் ஒற்றுமையை' வலுப்படுத்தும் நோக்கத்துடன், தேசத்திற்கு அதிகாரம் அளித்து, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கண்ணாடி இழை இணைப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது அரசியலமைப்பு ஒற்றுமையை வலியுறுத்துகிறது, இந்த ஒற்றுமையின் ஒரு முக்கியமான அம்சம் தாய்மொழிகளை அங்கீகரிப்பதாகும். ஒரு தேசத்தை அதன் சொந்த மொழிகளை நசுக்கி உண்மையான பண்பாடாக மாற்ற முடியாது. இந்தப் புரிதலுக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இன்று ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்கூட தங்கள் சொந்த மொழிகளில் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ ஆசைப்படலாம். மேலும், பல்வேறு இந்திய மொழிகளுக்கு செம்மொழிகளாக உரிய அங்கீகாரம் வழங்கி கௌரவித்துள்ளோம். தேசிய ஒற்றுமையை வளர்க்கவும், இளைய தலைமுறையினரிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

'காசி தமிழ்ச் சங்கமம்' மற்றும் 'தெலுங்கு காசி சங்கமம்' போன்ற முயற்சிகள் குறிப்பிடத்தக்க நிறுவனமயமாக்கப்பட்ட முயற்சிகளாக உருவாகியுள்ளன. இந்த கலாச்சார முயற்சிகள் சமூக நெருக்கத்தை வளர்ப்பதையும், நமது அரசியலமைப்பின் முக்கிய நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்தியாவின் ஒற்றுமையைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அதன் மைல்கற்களை பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும். 25, 50 மற்றும் 60 ஆண்டுகள் போன்ற குறிப்பிடத்தக்க ஆண்டுவிழாக்கள் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இருப்பினும், வரலாறு ஒரு கலவையான மரபை வெளிப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டம் அதன் 25 வது ஆண்டு நிறைவைக் குறித்தபோது, நாடு அதன் இருண்ட காலங்களில் ஒன்றைக் கண்டது. அவசரநிலை அமல்படுத்தப்பட்டது, அரசியலமைப்புச் சட்டம் ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது, மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. இந்த மோசமான அநீதி காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக உள்ளது. உலகளவில் ஜனநாயகம் பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், இந்தத் துரோகம் நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கடின உழைப்பின் கழுத்தை நெரிக்கும் செயலாக நினைவுகூரப்படும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையின் கீழ், 2000-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நாடு இந்த மைல்கல்லைக் கோலாகலமாகக் கொண்டாடியது. ஒற்றுமை, பொதுமக்கள் பங்கேற்பு, பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பு செய்தியை அவர் வழங்கினார், இதன் மூலம் அரசியலமைப்பின் உண்மையான உணர்வை உயிர்ப்பித்து பொதுமக்களுக்கு உத்வேகம் அளித்தார்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த காலகட்டத்தில்தான் நான் முதலமைச்சராகும் பெருமையைப் பெற்றேன். எனது ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புச் சட்டம் 60-வது ஆண்டைக் கொண்டாடியபோது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குஜராத்தில் நாங்கள் அதைக் கொண்டாடினோம். வரலாற்றில் முதன்முறையாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்லக்கில் யானை மீது அரசின் சாசனம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் சாசன கௌரவ யாத்திரைக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது, முதலமைச்சர் நடந்து சென்றார். இது நமது அரசியலமைப்பின் மீதான மரியாதையின் அடையாளமாகவும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பித்தலாகவும் இருந்தது. மக்களவையின் பழைய அறையில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்புச் சட்ட தினத்தை நாம் கொண்டாடியபோது, ஜனவரி 26 வரவிருந்த குடியரசு தினத்தை மேற்கோள் காட்டி, ஒரு மூத்த தலைவர் இதுபோன்ற கொண்டாட்டத்தின் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்த அணுகுமுறை அந்த நேரத்தில் அரசியலமைப்பின் முக்கியத்துவம் எவ்வளவு குறைவாக மதிப்பிடப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், இந்தச் சிறப்பு அமர்வில், அரசியலமைப்பின் சக்தி மற்றும் பன்முகத்தன்மை குறித்து விவாதிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். துரதிர்ஷ்டவசமாக, ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்திருக்கக்கூடிய விவாதம், அரசியல் நிர்பந்தங்களால் மாறி விட்டது. கட்சி எல்லைகளைக் கடந்து, அரசியலமைப்பு பற்றிய புதிய தலைமுறையின் புரிதலை வளப்படுத்தும் ஒரு விவாதம் நடைபெற்றிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எனது மனமார்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தின் காரணமாகவே என்னைப் போன்ற, அரசியல் பரம்பரை அல்லது பின்னணி இல்லாமல், பொறுப்பான பதவிகளுக்கு உயர முடிந்தது. அரசியல் சாசனத்தின் சக்தியும், மக்களின் ஆசீர்வாதமும்தான் இதை சாத்தியமாக்கியுள்ளது. என்னைப் போலவே எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர். கனவு காணவும், சாதிக்கவும் அரசியலமைப்பு நமக்கு அதிகாரம் அளித்துள்ளது. மக்கள் நம்மீது வைத்துள்ள இந்த அளவற்ற அன்பும், நம்பிக்கையும் - ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை நமக்கு கிடைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் இதற்கு சாத்தியமில்லை.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

நம் தேசத்தின் வரலாறு முழுவதும், பல ஏற்ற தாழ்வுகள், சவால்கள், தடைகள் இருந்தன. இருப்பினும், அசைக்க முடியாத வலிமையுடனும், அர்ப்பணிப்புடனும் அரசியலமைப்பின் பக்கம் உறுதியாக நின்ற இந்த நாட்டு மக்களுக்கு நான் வணக்கம் செலுத்த வேண்டும்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இன்று தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. எனினும், உண்மைகளை தேசத்தின் முன் முன்வைப்பது எனது கடமையாகும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பம் அரசியலமைப்பை குறைத்து மதிப்பிடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தனர். இந்தக் குடும்பத்தை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்களில் 55 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்தது.  இந்தக் குடும்பத்தால் நிறுவப்பட்ட எதிர்மறை மரபுகள், குறைபாடுள்ள கொள்கைகள்தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் பற்றிய உண்மையை அறிய இந்த தேசத்தின் மக்களுக்கு உரிமை உண்டு. அவை இன்றும் தொடர்ந்து விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், இந்தக் குடும்பம் அரசியலமைப்புக்கு சவால் விடுத்து தீங்கு விளைவித்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

1947 முதல் 1952 வரை இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு தற்காலிக, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு நடைமுறையில் இருந்தது, தேர்தல்கள் நடத்தப்படும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக இது இயங்கியது. அந்தக் காலகட்டத்தில், மாநிலங்களவை அமைக்கப்படவில்லை. மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் விரிவான விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட போதிலும், மக்களிடமிருந்து எந்த உத்தரவும் கிடைக்கவில்லை. 1951-ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த இடைக்கால அமைப்பு அரசியலமைப்பைத் திருத்த ஒரு அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தியது. விளைவு? கருத்துச் சுதந்திரம் தாக்கப்பட்டது. இந்த செயல் அரசியலமைப்பையும் அதை உருவாக்கியவர்களையும் கடுமையாக அவமதிப்பதாகும். அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களின் போது அவர்கள் சாதிக்கத் தவறிய விஷயங்கள் பின்னர் பின்கதவு வழியாக அவர்களின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தொடரப்பட்டன. இது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரின் முடிவு அல்ல. இடைக்கால அரசை வழிநடத்தும் ஒருவரின் முடிவு என்பது கவனிக்கத்தக்கது. நிச்சயமாக இது ஒரு கொடிய பாவமாகும்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

அதே காலகட்டத்தில், அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, ஒரு முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், "அரசியலமைப்பு நமக்கு ஏற்றவகையில் இல்லை என்றால், அதை என்ன விலை கொடுத்தாவது மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.  பண்டித நேருவால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், அரசியலமைப்பின் புனிதத்தை  அவமதிப்பதைக் குறிக்கின்றன.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

1951-ம் ஆண்டில் இந்த அரசியலமைப்புக்கு முரணான செயல் கவனிக்கப்படாமல் போகவில்லை. அப்போது, குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், இது மாபெரும் தவறு என்று எச்சரித்தார். மக்களவைத் தலைவர் கூட பண்டித நேரு அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று எச்சரித்தார். ஆச்சார்யா கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் அவரை நிறுத்துமாறு வலியுறுத்தினர். மூத்த  மரியாதைக்குரிய நபர்களிடமிருந்து இத்தகைய நல்ல ஆலோசனைகளைப் பெற்ற போதிலும், பண்டித நேரு, அவர்களின் கவலைகளைப் புறக்கணித்தார். பிடிவாதமாக அரசியலமைப்பின் தனது சொந்த பதிப்பைப் பின்பற்றினார்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஒரு தணியாத வேட்கையை வளர்த்துக் கொண்டது. அடிக்கடி அதன் அரசியல் செயல்திட்டத்திற்கு ஏற்ப அரசியலமைப்பை குறிவைத்தது. இந்த இடைவிடாத முயற்சி அரசியலமைப்பின் ஆன்மாவின் மீது ஆழமான வடுக்களை விட்டுச் சென்றது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

கடந்த 60 ஆண்டுகளில் 75 முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

அரசியலமைப்பு துஷ்பிரயோகத்திற்கு பயன்படுவதற்கான விதைகள் நாட்டின் முதல் பிரதமரால் விதைக்கப்பட்டன. பின்னர் மற்றொரு பிரதமரான திருமதி இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டன. முதல் பிரதமரால் தொடங்கப்பட்ட தவறான செயல்கள் மேலும் சேதத்தில் முடிந்தது. 1971-ம் ஆண்டில், ஒரு அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கியது மட்டுமல்லாமல், நீதித்துறையின் சிறகுகளையும் வெட்டியது. நீதித்துறை மறுஆய்வு இல்லாமல் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவையும் நாடாளுமன்றம் திருத்த முடியும் என்று வலியுறுத்தியது. நீதித்துறையின் உரிமைகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டன. இந்த மோசமான செயல் 1971-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியால் செய்யப்பட்டது, அவரது அரசு அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும், நீதித்துறையின் மீது கட்டுப்பாட்டை செலுத்தவும் இந்த திருத்தத்தைப் பயன்படுத்தியது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

திருமதி காந்தியை பொறுப்பேற்க வைக்க யாரும் இல்லாத நிலையில், அரசியலமைப்பிற்கு முரணான நடைமுறைகளுக்காக நீதிமன்றம் அவரது தேர்தலை செல்லாது என்று அறிவித்தபோது, அவர் தனது பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க அவசரநிலையை அமல்படுத்தியதன் மூலம் பதிலடி கொடுத்தார். அரசியலமைப்பு விதிகளின் இந்த துஷ்பிரயோகம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது. 1975-ம் ஆண்டில், அவர் 39-வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இது குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், ஆகியோர் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என்பதை உறுதி செய்தது. இது எதிர்கால தவறான நடத்தைக்கான ஒரு கேடயமாக மட்டுமல்லாமல், கடந்த கால மீறல்களை மூடிமறைப்பதற்கான ஒரு வழிவகையாகவும் இருந்தது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

நெருக்கடி நிலையின் போது, மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன, ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதித்துறை முடக்கப்பட்டது, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. திருமதி இந்திரா காந்தி "உறுதியான நீதித்துறை" என்ற கருத்தை முன்வைத்தார், ஆனால் அது நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. அரசியல் சாசனத்தை நிலைநிறுத்தி, திருமதி காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.ஆர்.கண்ணா, மூத்த நீதிபதியாக இருந்தபோதிலும், வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. இது அரசியலமைப்பு  ஜனநாயக நெறிமுறைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இன்று இந்த சபையில் கூடியுள்ள கட்சிகள் உட்பட பல அரசியல் தலைவர்கள் அந்த நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பாவி குடிமக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். காவல்துறையினரின் அட்டூழியங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பலர் சிறையிலேயே தங்கள் உயிரையும் இழந்தனர். ஒரு இரக்கமற்ற அரசு அரசியலமைப்பை கிழித்தெறிந்து கொண்டிருந்தது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த பாரம்பரியம் அத்துடன் முடிவடையவில்லை. நேருவில் தொடங்கியதை இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் தொடர்ந்தனர். ராஜீவ் காந்தி அரசியல் சாசனத்திற்கு மற்றொரு பலத்த அடியை கொடுத்தார். ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் நீதி  சமத்துவத்தை நிலைநிறுத்தியது. ஒரு வயதான பெண்ணுக்கு அவரது உரிமையை வழங்கியது. ஆயினும்கூட, ராஜீவ் காந்தியின் அரசு, அரசியலமைப்பு விழுமியங்களை விட வாக்கு வங்கி அரசியலுக்கு முன்னுரிமை அளித்து, இந்த தீர்ப்பை சட்டத்தின் மூலம் மாற்றியமைத்து. அடிப்படைவாத அழுத்தங்களுக்கு தலைவணங்கி, நீதியின் உணர்வை தியாகம் செய்தது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

அரசியலமைப்பு சிதைவின் பாரம்பரியம் தொடர்ந்தது. நேரு தொடங்கியதை இந்திரா வலுப்படுத்தினார். ராஜீவ் மேலும் வலுப்படுத்தினார். ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமரானார். அரசியல் சாசனத்துக்கு இன்னொரு பலத்த அடி கொடுத்தார். அனைவருக்கும் சமம், அனைவருக்கும் நீதி என்ற உணர்வை அவர் புண்படுத்தினார்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது, அரசியலமைப்பின் கண்ணியம்  சாராம்சத்தின் அடிப்படையில் ஒரு இந்திய பெண்ணுக்கு நீதி நிலைநிறுத்தப்பட்டது. இந்த மூதாட்டிக்கு நீதிமன்றத்தால் உரிய நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்தத் தீர்ப்பைப் புறக்கணித்து, வாக்கு வங்கி அரசியலின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, அடிப்படைவாதக் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தார். நீதி கேட்ட ஒரு வயதான பெண்மணிக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக, அவர் அடிப்படைவாதிகளுடன் கூட்டு சேர்ந்தார். அரசியலமைப்பின் உணர்வை தியாகம் செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முன்னுதாரணம் நேருவால் அமைக்கப்பட்டது, இந்திராவால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது, ராஜீவால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. ராஜீவ் ஏன் இந்த முறையை நிலைநிறுத்தினார்? இது அரசியலமைப்பின் புனிதத்தை மதிக்காததிலிருந்தும், அதை சிதைக்க விரும்புவதிலிருந்தும் உருவானது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இதோடு நின்றுவிடவில்லை. அடுத்த தலைமுறை தலைமையும் இதேபோல் உடந்தையாக இருந்தது. எனக்கு முன்பு பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டும் ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த புத்தகத்தில், மன்மோகன் சிங்  கூறியது. "கட்சித் தலைவர் அதிகாரத்தின் மையம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சிக்கு அரசு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

வரலாற்றில் முதன்முறையாக, அரசியலமைப்பு இவ்வளவு ஆழமான முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற கருத்தாக்கமே சமரசம் செய்யப்பட்டது. நாம் ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருக்கும்போது, பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் மேலாக அரசியலமைப்புக்கு முரணான  சத்தியப்பிரமாணம் செய்யாத தேசிய ஆலோசனைக் குழுவை வைப்பதன் மூலம் அது சீர்குலைக்கப்பட்டது. இது பிரதமர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படாத, குறைக்கப்பட்ட அந்தஸ்தை வழங்கியது, இது நமது அரசியலமைப்பால் நிறுவப்பட்ட நிர்வாகக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

மற்றொரு தலைமுறைக்கு முன்னோக்கிச் செல்லும்போது, அவர்களின் செயல்களை ஆராய்வோம். இந்திய அரசியலமைப்பின் கீழ், குடிமக்கள் அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அரசின் தலைவர் அமைச்சரவையை உருவாக்குகிறார். இது ஒரு அடிப்படை அரசியலமைப்பு செயல்முறை. எனினும், இந்த அமைச்சரவையால் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம், அரசியலமைப்பை அவமதிக்கும் ஆணவம் நிறைந்த நபர்களால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெட்கமின்றி கிழித்தெறியப்பட்டது. அரசியல் சாசனம் தங்களுக்கு உகந்த போதெல்லாம் கையாளவும், புறக்கணிக்கவும் அவர்கள் பழகிவிட்டனர். துரதிர்ஷ்டவசமாக, ஒரு திமிர் பிடித்த நபர் அமைச்சரவை முடிவை கிழித்தெறிந்து, அதை மாற்றியமைக்க அமைச்சரவையை கட்டாயப்படுத்தினார். எந்த வகையான அமைப்பு இந்த முறையில் செயல்படுகிறது?

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

நான் கூறும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பானது. இங்கே கவனம் அரசியலமைப்பில் மட்டுமே உள்ளது. நான் தனிப்பட்ட கருத்துக்களையோ அல்லது எண்ணங்களையோ பகிர்ந்து கொள்ளவில்லை, வரலாற்று உண்மைகளை முன்னிலைப்படுத்துகிறேன்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

காங்கிரஸ் கட்சி பலமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது, அதன் முக்கியத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு மீறல்கள்  அரசியலமைப்பு நிறுவனங்களை அவமதிக்கும் நிகழ்வுகளால் காங்கிரஸ் மரபு நிரம்பியுள்ளது. பிரிவு 370 பரவலாக அறியப்பட்டாலும், மிகச் சிலரே பிரிவு 35 ஏ பற்றி அறிந்திருக்கிறார்கள். அரசியலமைப்பு ஆணை இருந்தபோதிலும், அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல், 35 ஏ பிரிவு நாட்டின் மீது திணிக்கப்பட்டது. இந்த சட்டம் நமது அரசியலமைப்பின் மூலக்கல்லாக விளங்கும் நாடாளுமன்றத்தின் புனிதத்தை புறக்கணித்தது. நாடாளுமன்றமே ஓரங்கட்டப்பட்டது, அதன் அதிகாரம் கழுத்து நெரிக்கப்பட்டது. பிரிவு 35 ஏ நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் நாட்டின் நாடாளுமன்றத்தை இருட்டில் வைத்திருந்தது. 35 ஏ பிரிவு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த ஒருதலைப்பட்சமான செயல் ஜனநாயகம்  அரசியலமைப்பு உரிமையின் கொள்கைகளை மீறியது, இது நாட்டிற்கு நீண்டகால சவால்களை உருவாக்கியது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இது நாடாளுமன்றத்தின் உரிமையாகும். இது போன்ற விஷயங்களில் யாரும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. இருப்பினும், அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர். அவர்களின் தயக்கம் குற்ற உணர்விலிருந்து உருவானது; அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை இந்த நாட்டு மக்களிடமிருந்து மறைக்க முயன்றனர்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

மேலும், இன்று ஒவ்வொருவரும் ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் பாபா சாஹேப் அம்பேத்கர் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார். நம் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த அனைத்து குறிப்பிடத்தக்க பாதைகளும் அவரால் வகுக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

பாபா சாஹேப் அம்பேத்கரின் காலத்தில் அவர் மீது நிலவிய கசப்பையும் விரோதத்தையும் நான் ஆராய விரும்பவில்லை. எனினும், அடல் ஜி ஆட்சியில் இருந்தபோது, பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவாக ஒரு நினைவகத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அடல் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை அல்லது தொடர அனுமதிக்கப்படவில்லை. எங்கள் அரசு பதவியேற்றவுடன், பாபா சாஹேப் அம்பேத்கர் மீது நாங்கள் கொண்டிருந்த அளவற்ற மரியாதையின் உந்துதலால், அலிப்பூர் சாலையில் பாபா சாஹேப் நினைவகத்தைக் கட்டி, திட்டத்தை நிறைவு செய்தோம்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

முன்பு ஜன்பத் அருகே அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டுவதற்கான முன்மொழிவு உருவாக்கப்பட்டது. இருப்பினும், 40 ஆண்டுகளாக, இந்த யோசனை காகிதத்தில் மட்டுமே இருந்தது.  எந்த முன்னேற்றமும் இல்லை. 2015-ம் ஆண்டு எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதியை நிறைவேற்றி பணிகளை நிறைவு செய்தோம். பாபா சாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற முடிவும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் நிறைவேறியது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

பாபா சாஹேப் அம்பேத்கரின் 125-வது ஆண்டை உலகம் முழுவதும் கொண்டாடினோம். 120 நாடுகளில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோம். இருப்பினும், பாபா சாஹேப் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவின் போது, மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சுந்தர்லால் பட்வா தலைமையிலான பிஜேபி அரசு, பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறப்பிடமான மோ-வை நினைவுச்சின்னமாக மீண்டும் கட்டியெழுப்பும் பணியை மேற்கொண்டது. இந்த கௌரவமான முயற்சி அவரது பதவிக்காலத்தில் நடந்தது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

பாபா சாஹேப் அம்பேத்கர் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்தவும், அவர்கள் பிரதான நீரோட்டத்தில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இந்தியா முழுமையான வளர்ச்சியடைய வேண்டுமென்றால், எந்தப் பகுதியும் சமூகமும் புறக்கணிக்கப்படக் கூடாது என்று அவர் உறுதியாக நம்பினார். இந்த தொலைநோக்கு பார்வை நம் நாட்டில் இடஒதுக்கீடு முறையை நிறுவ வழிவகுத்தது. இருப்பினும், வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியவர்கள், மதத்தின் அடிப்படையில் திருப்திப்படுத்துவதற்காக இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, எஸ்சி, எஸ்டி  ஓபிசி சமூகங்களுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தனர்.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

இடஒதுக்கீட்டின் கதை நீண்டது  சவால்கள் நிறைந்தது. நேரு முதல் ராஜீவ் காந்தி வரை, அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் பிரதமர்கள் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தனர். இடஒதுக்கீட்டை எதிர்த்து நேருவே முதலமைச்சர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதியதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டை எதிர்த்து இதே அவையில் நீண்ட உரைகளை நிகழ்த்தினர். இந்தியாவில் சமத்துவம்  சமச்சீரான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பாபா சாகேப் அம்பேத்கர் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியபோது, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அதை எதிர்த்தனர்.

ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முயன்ற மண்டல் கமிஷனின் அறிக்கை பல தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகுதான் ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுவரை, ஓபிசி சமூகத்திற்கு பல்வேறு திறன்களில் தேசத்திற்கு சேவை செய்வதில் அவர்களுக்கு உரிய இடம் மறுக்கப்பட்டது. இது காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. இடஒதுக்கீட்டை முன்பே அமல்படுத்தியிருந்தால், ஓபிசி சமூகம் பல பதவிகளில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கும். ஆனால் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இது காங்கிரஸ் செய்த மற்றொரு பாவம், அவர்களின் செயல்களின் விளைவுகளை தேசம் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கிறது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து நிறுவன உறுப்பினர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். முழுமையான விவாதத்திற்குப் பிறகு, இந்தியா போன்ற ஒரு தேசத்தின் ஒற்றுமை  ஒருமைப்பாட்டிற்கு, மதம் அல்லது பிரிவின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூட்டாக முடிவு செய்யப்பட்டது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.- இது ஒரு கவனக்குறைவோ அல்லது தவறோ அல்ல. இந்தியாவின் ஒற்றுமை  ஒருமைப்பாட்டின் பொருட்டு, மதம்  பிரிவின் அடிப்படையில் இத்தகைய ஏற்பாடுகள் செய்வதில்லை என்று கவனமாக பரிசீலித்த பிறகு முடிவு செய்யப்பட்டது.  ஆனால் காங்கிரஸ் கட்சி, அதிகாரப் பசி  அதன் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அதுமட்டுமின்றி, சில இடங்களில் அதை அமல்படுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இப்போது, அவர்கள் சாக்குப்போக்குகளையும் திட்டங்களையும் கொண்டு வருகிறார்கள், அவர்கள் இதைச் செய்வோம். அல்லது அதைச் செய்வோம் என்று கூறுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் உண்மையான நோக்கம் தெளிவாக உள்ளது.  அவர்கள் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க விரும்புகிறார்கள். அதனால்தான் இதுபோன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வெட்கக்கேடான முயற்சி இது.

மாண்புமிகு மக்களவைத்  தலைவர் அவர்களே,

நான் விவாதிக்க விரும்பும் எரியும் பிரச்சனை ஒன்று உள்ளது, அது பொது சிவில் சட்டம்! இந்த விஷயத்தை அரசியல் நிர்ணய சபையும் புறக்கணித்து இருக்கவில்லை. அரசியல் நிர்ணய சபைபொது சிவில் சட்டம் குறித்து நீண்ட, ஆழமான விவாதங்களில் ஈடுபட்டது. கடுமையான விவாதங்களுக்குப் பின், எதிர்காலத்தில் எந்த அரசு  தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுத்து நாட்டில் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது நல்லது என்று அவர்கள் முடிவு செய்தனர். இது அரசியல் நிர்ணய சபையின் வழிகாட்டு உத்தரவு. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் அவ்வாறே கூறியிருந்தார். ஆனால், அரசியல் சாசனத்தையோ அல்லது நாட்டையோ புரிந்து கொள்ளாதவர்கள், அதிகாரப் பசி என்பதைத் தாண்டி வேறெதையும் அறியாதவர்கள், பாபாசாகேப் உண்மையில் என்ன கூறினார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பாபாசாகேப் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் நான் இதைச் சொல்கிறேன்: இதை சொல்லப்பட்ட பின்னணியில் இருந்து வெளியே எடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்களை வெட்டி பரப்புவதன் மூலம் தவறான கதைகளாக மாற்ற வேண்டாம்!

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்று வலுவாக வாதிட்டார். அந்த சகாப்த விவாதங்களின் போது, அரசியல் நிர்ணய  சபையின் முக்கிய உறுப்பினரான கே.எம்.முன்ஷி, நாட்டின் ஒற்றுமை மற்றும் நவீனத்திற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று வலியுறுத்தினார். உச்சநீதிமன்றமும் பல சந்தர்ப்பங்களில், நாட்டில் ஒரு சீரான சிவில் சட்டம்  அமல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறியுள்ளது. அதை நோக்கி செயல்படுமாறு அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் உணர்வு மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை  நிறுவுவதற்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். எங்கள் முழு பலத்துடனும் செயல்படுகிறோம். இருப்பினும், இன்று, காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகளை மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் விருப்பங்களையும் அவமதிக்கிறது. ஏனென்றால் இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு ஒரு புனித நூல் அல்ல; மாறாகஅரசியல் சூழ்ச்சிக்கான ஒரு கருவியாக அது மாறியுள்ளது . அவர்கள் அரசியல் விளையாட்டுக்கான ஒரு ஆயுதமாக அடை மாற்றியுள்ளனர்.  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியல் சாசனம் என்ற வார்த்தை கூட காங்கிரஸ் கட்சியின் உதடுகளுக்குப் பொருந்தாது. தனது சொந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே  மதிக்காத ஒரு கட்சி, தனது சொந்த கட்சியின் வழிகாட்டும் கொள்கைகளை ஒருபோதும் கடைப்பிடிக்காத ஒரு கட்சி, நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் ஜனநாயக உணர்வு தேவை, அது வீண் அல்ல. அவர்களின் நரம்புகள் எதேச்சதிகாரம் மற்றும் வாரிசு அரசியலால் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களின் செயல்பாட்டில் உள்ள குழப்பத்தையும் ஜனநாயக விழுமியங்களின் பற்றாக்குறையையும் பாருங்கள். நான் காங்கிரஸைப் பற்றிப் பேசுகிறேன். பன்னிரண்டு மாகாண காங்கிரஸ் கமிட்டிகள் சர்தார் படேலை பிரதமர் பதவிக்கு ஆதரித்தன. ஒரு கமிட்டி கூட நேருவை ஆதரிக்கவில்லை. அவர்களின் சொந்த அரசியலமைப்பின்படி, சர்தார் படேல் நாட்டின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதது, தங்கள் சொந்த கட்சியின் அமைப்புச் சட்டத்தைப்  புறக்கணித்தது ஆகியவை சர்தார் படேலை ஓரங்கட்ட வழிவகுத்தது.  அவர்களே அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். தனது சொந்த அமைப்புச் சட்டத்தை  நிலைநிறுத்த முடியாத ஒரு கட்சி நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தங்கள் கதையாடல்களுக்கு ஏற்ப அரசியலமைப்பில் பெயர்களைத் தேடுபவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் சொந்த கட்சியின் வரலாற்றிலிருந்து ஒரு கசப்பான உண்மையை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரைக் கொண்டிருந்தது - பிற்படுத்தப்பட்டவர் மட்டுமல்ல, மிகவும் பின்தங்கியவர். அவர் பெயர் சீதாராம் கேசரி.அவர் எப்படி நடத்தப்பட்டார்? அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் குளியலறையில் பூட்டப்பட்டு, பின்னர் சடங்குகள் ஏதுமின்றி  தெருக்களில் தூக்கி எறியப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற அவமானம் தங்கள் கட்சியின் அமைப்புச் சட்டத்தில்  ஒருபோதும் எழுதப்படவில்லை. இருப்பினும் அவர்கள் அதை அப்பட்டமாக புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் சொந்த கட்சியின் அமைப்புச் சட்டத்தில்  பொதிந்துள்ள ஜனநாயக செயல்முறைகளுக்கு செவிசாய்க்கவில்லை. காலப்போக்கில், காங்கிரஸ் கட்சி ஜனநாயக விழுமியங்களை முற்றிலுமாக கைவிட்டு, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக சிறைப்பட்டுவிட்டது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசியலமைப்புடன் விளையாடுவதும், அதன் ஆன்மாவை அழிப்பதும் காங்கிரஸின் இயல்பிலேயே வேரூன்றி உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு, அதன் புனிதத்தன்மை, அதன் ஒருமைப்பாடு ஆகியவை மிக உயர்ந்தவை ஆகும் இது வெறும் வாய்வீச்சு அல்ல - எங்களின் செயல்கள் அதை நிரூபிக்கின்றன.  ஒரு உதாரணம் சொல்கிறேன். 1996 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அரசியலமைப்பின் உணர்வைப் பின்பற்றி, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர்  அழைப்பு விடுத்தார். ஆட்சி 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. அரசியலமைப்பின் ஆன்மாவை நாங்கள்  நேசிக்கவில்லை என்றால், பெரும்பான்மையைப் பெறுவதற்காக பதவிகள், துணைப்பிரதமர் பதவிகள் அல்லது பிற சலுகைகளை வழங்கி அதிகாரத்தின் பலன்களை அனுபவிப்பதற்காக பேரம் பேசுவதில் ஈடுபட்டிருக்க முடியும். ஆனால் அடல் அவர்கள் பேரம் பேசும் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை, அதற்கு பதிலாக அரசியலமைப்பை மதிப்பதைத் தேர்ந்தெடுத்தார். 13 நாட்களுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்தார். இதுதான் ஜனநாயக விழுமியங்களின் உச்சம். மீண்டும், 1998-ல், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) கீழ், நாங்கள் ஒரு நிலையான அரசை அமைத்தோம். இருப்பினும், "நாங்கள் இல்லையென்றால், யாரும் இல்லை" என்ற மனநிலை கொண்டவர்கள் அடல் அவர்களின் அரசை சீர்குலைக்க தங்கள் வழக்கமான தந்திரங்களை செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும் குதிரை பேரம் சாத்தியமானதாகவே இருந்தது.; வாக்குகளை வாங்கவும் விற்கவும் சந்தை சுறுசுறுப்பாக இருந்தது. ஆனால், அரசியலமைப்பின் உணர்வுக்கு மதிப்பளித்த  அடல் அவர்கள், கொள்கைகளில் சமரசம் செய்வதை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைவதையே விரும்பினார். அரசு வீழ்ந்தது. நாங்கள் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளை நிலைநிறுத்தினோம். இதுதான் எங்களின்  வரலாறு, இதுதான் எங்களின் விழுமியங்கள், எங்களின் பாரம்பரியம். மறுபுறம், என்ன நடந்தது என்று பாருங்கள். தங்கள் சிறுபான்மை அரசைக் காப்பாற்ற, அவர்கள் மோசமான முறையில்  வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் ஊழலில் இறங்கினர். வாக்குகளை வாங்குவதற்காக நாடாளுமன்றத்தில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வரப்பட்டது. நீதித்துறையே இதை ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று முத்திரை குத்தியுள்ளது. பாரதத்தின் புனிதமான நாடாளுமன்றத்தை  பணத்திற்காக வாக்குகளை விற்கும் சந்தையாக மாற்றினர்.

ஜனநாயகத்தின் மீதான பிஜேபியின் அர்ப்பணிப்புக்கும் அதை காங்கிரஸ் கையாள்வதற்கும் இடையிலான இந்த வேறுபாடு எங்களின் மதிப்புகளையும்  அரசியலமைப்பின் மீதான அவர்களின் அவமதிப்பையும் பற்றி பேசுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

1990களில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வெட்கக்கேடான செயல் மேற்கொள்ளப்பட்டது - 140 கோடி இந்தியர்களின் இதயங்களில் வளர்க்கப்பட்ட அரசியலமைப்பின் உணர்வை காலில் போட்டு மிதித்த மன்னிக்க முடியாத பாவம். காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகார துரத்தலும், அதிகாரப் பசியும் மட்டுமே கட்சியின் வரலாறும் நிகழ்காலமும் ஆகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2014-ம் ஆண்டுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் சாசனமும், ஜனநாயகமும் வலுப்பெற்றன. பழைய நோய்களிலிருந்து தேசத்தை விடுவிக்க நாங்கள் ஓர்  இயக்கத்தைத் தொடங்கினோம். கடந்த 10 ஆண்டுகளில்நீங்களும்  அரசியலமைப்பு திருத்தங்களை செய்துள்லீர்களே  என்றும் எங்களிடம் கேட்கப்பட்டது. ஆம், நாட்டின் ஒற்றுமைக்காகவும், அதன் ஒருமைப்பாட்டுக்காகவும், அதன் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும், அரசியலமைப்பின் உணர்வுக்கு முழு அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம். ஏன் இந்த திருத்தங்களை செய்தோம்? இந்த நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரி வந்தனர். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை கௌரவிப்பதற்காக, அதற்கு அரசியல் சட்ட அந்தஸ்தை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில்  திருத்தங்களைச் செய்தோம்.  இந்த நடவடிக்கையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுடன் நிற்பது நமது கடமை, அதனால்தான் அரசியலமைப்பில்  திருத்தம் செய்யப்பட்டது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த நாட்டில், எந்த சாதியில் பிறந்திருந்தாலும், வறுமையின் காரணமாக வாய்ப்புகளை பெற முடியாமல்  பெருமளவு  மக்கள் இருந்தனர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை, இது அதிருப்தியும்   அமைதியின்மையும் வளர வழிவகுத்தது. கோரிக்கைகள் இருந்தன, ஆனால் யாரும்  தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப்பிரிவில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்தோம். நாட்டில் இடஒதுக்கீட்டுக்கான முதல் திருத்தம் இதுவாகும், இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைவரும் அதை அன்புடனும் புரிதலுடனும் ஏற்றுக்கொண்டனர். இது சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாலும், அரசியலமைப்பின் உணர்வை பிரதிபலிப்பதாலும் நாடாளுமன்றத்தில் ஒருமனதான  ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. எல்லோரும் ஒத்துழைத்தார்கள். இப்படித்தான் இந்தத் திருத்தம் நிறைவேறியது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஆம், நாங்கள் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்துள்ளோம், ஆனால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் அவ்வாறு செய்தோம். பழைய நாடாளுமன்ற கட்டிடம் இதற்கு சாட்சி - நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நாடு தயாராகி வந்தபோது, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று அவைத்தலைவர் இருக்கை அருகே  வந்து, ஆவணங்களைப் பிடுங்கி, கிழித்தெறிந்தது. சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்தப் பிரச்சனை 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இன்று, பெண்களின் உரிமைகளில் முன்னேற்றத்தைத் தடுத்த அதே நபர்கள் அவர்களின் வழிகாட்டிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த நாட்டின் பெண்களுக்கு அநீதி இழைத்தவர்கள் இப்போது அவர்களின் வழிகாட்டிகள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாட்டின் ஐக்கியத்திற்காக அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொண்டோம். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பானது 370 வது பிரிவு ஏற்படுத்திய தடையால் ஜம்மு-காஷ்மீரை அடைய முடியவில்லை. டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் பாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அமலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பாபாசாகேபை கௌரவிக்கவும், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், நாங்கள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களைச் செய்தோம், 370 வது பிரிவை தைரியமாக நீக்கினோம். இப்போது, பாரத உச்ச நீதிமன்றமும் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

370-வது பிரிவை நீக்குவதற்கான சட்டத்திருத்தத்தை நாங்கள் செய்தோம். பிரிவினையின் போது, மகாத்மா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொள்ளும்போதெல்லாம் இந்த நாடு அவர்களை கவனித்துக்கொள்ளும் என்று பகிரங்கமாக அறிவித்தனர். காந்திஜியின் வாக்குறுதியை அவரது பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒருபோதும் நிறைவேற்றவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். இது நாங்கள் கொண்டு வந்த ஒரு சட்டம், அதைப்பெருமையுடன் இன்றும் நிலைநிறுத்துகிறோம். இந்த நாட்டின் அரசியலமைப்பின் உணர்வில் நாங்கள் உறுதியாக நின்றதால் நாங்கள் அதிலிருந்து விலகிச் செல்லவில்லை.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாங்கள்  செய்த அரசியலமைப்பு திருத்தங்கள் கடந்த கால தவறுகளை சரிசெய்து பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை வலுப்படுத்துவதாக இருந்தன. நாங்கள் உண்மையாக நின்றோமா இல்லையா என்பதற்கு காலம் பதில் சொல்லும். இந்த திருத்தங்கள் சுயநல அதிகார நலன்களுக்காக செய்யப்பட்டவை அல்ல - அவை தேசத்தின் நலனுக்காக ஒரு நல்லொழுக்கமான செயலுக்காக செய்யப்பட்டன. எனவே, இந்த முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்கள், அவை நாட்டின் நலனை மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இங்கு அரசியலமைப்பு குறித்து பல உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த கட்டுப்பாடுகள் உள்ளன. அரசியலில், மக்கள் குரிபிட்ட சில நோக்கங்களுக்காக சிலவற்றைச் செய்யலாம். எனினும், மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மிகவும் உணர்வுப்பூர்வமான அம்சம் எப்போதுமே இந்திய மக்கள்தான். மக்களாகிய நாம், பாரதத்தின் குடிமக்கள். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கானது. அவர்களின் நலனுக்கானது . அவர்களின் கண்ணியத்திற்கானது. எனவே, அரசியலமைப்பு மக்கள்நல அரசுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. மக்கள்நல அரசு என்பது குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒன்றாகும். எங்கள் காங்கிரஸ் சகாக்கள் ஒரு வார்த்தையை மிகவும் நேசிக்கிறார்கள், நான் இன்று அந்த வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். அவர்கள் மிகவும் விரும்பும் வார்த்தை, அது இல்லாமல் அவர்களால் வாழ முடியாது, 'ஜும்லா'. நமது காங்கிரஸ் சகாக்கள் இரவும் பகலும் 'ஜும்லா' பற்றி பேசுகிறார்கள், ஆனால் பாரதத்தின் மிகப்பெரிய 'ஜும்லா' நான்கு தலைமுறைகளாக நீடித்தது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்: "வறுமையை ஒழிப்போம்". இதுதான் அந்த 'ஜும்லா' – வறுமையை ஒழிக்கும் முழக்கம். அது அவர்களுடைய அரசியல் நலன்களுக்கு உதவியிருக்கலாம், ஆனால் ஏழைகளின் நிலைமை ஒருபோதும் மேம்படவில்லை.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கண்ணியத்துடன் வாழும் ஒரு குடும்பத்திற்கு கழிப்பறை கூட இல்லை என்று யாராவது உண்மையிலேயே சொல்ல முடியுமா? இதை நிவர்த்தி செய்ய உங்களுக்கு நேரம் இல்லையா? நமது நாட்டில், ஒரு காலத்தில் ஏழைகளின் கனவாக இருந்த கழிப்பறைகள் கட்டும் இயக்கம், இப்போது அவர்களின் கண்ணியத்திற்கான நனவாக மாறியுள்ளது. இந்தப் பணியை  ஏற்றுக்கொண்டு அயராது உழைத்தோம். அது கேலி செய்யப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால் அதையும் மீறி, சாதாரண குடிமக்களின் கண்ணியம் எங்கள் இதயங்களிலும் மனதிலும் இருந்ததால், நாங்கள் தடுமாறவில்லை. உறுதியாக நின்றோம்; முன்னேறினோம். அப்போதுதான் அந்தக் கனவு நனவாகியது. தாய்மார்களும், சகோதரிகளும் சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய உதயத்திற்குப் பிறகோ திறந்தவெளியில் மலம் கழிக்கச் சென்றுகொண்டிருந்தார்கள். அதைப் பற்றி நீங்கள் எந்த வலியையும் உணர்ந்ததில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏழைகளை தொலைக்காட்சியிலோ அல்லது செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளிலோ பார்த்திருக்கிறீர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை எதார்த்தம் உங்களுக்குத் தெரியாது. இல்லையெனில், நீங்கள் ஒருபோதும் அவர்களை இத்தகைய அநீதிக்கு உட்படுத்தியிருக்க மாட்டீர்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த நாட்டில் 80 சதவீத மக்கள் சுத்தமான குடிநீருக்காக ஏங்குகின்றனர். அவர்களுக்கு அது கிடைப்பதை எனது அரசியல் சாசனம் தடுக்க வேண்டுமா? சாதாரண மக்களுக்கு அடிப்படை மனித வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதை அரசியலமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்றுள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த நாட்டில் லட்சக்கணக்கான தாய்மார்கள் அடுப்பில் உணவு சமைத்தனர். அவர்களின் கண்கள் புகையால் சிவந்திருந்தன. புகையில் சமைப்பது என்பது நூற்றுக்கணக்கான சிகரெட்டுகளின் புகையை உள்ளிழுத்து உடலுக்குள் செலுத்துவதர்குச் சமம் என்று கூறப்படுகிறது. அவர்களின் கண்கள் எரிந்தன. அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களை புகையிலிருந்து விடுவிக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டோம். 2013 வரை, 9 சிலிண்டர்கள் அல்லது 6 சிலிண்டர்கள் கொடுப்பது பற்றி விவாதங்கள் இருந்தன. ஆனால் இந்த நாடு, எந்த ஒரு காலகட்டத்திலும்  ஒரு எரிவாயு சிலிண்டர் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதை  உறுதி செய்திருக்கவில்லை., ஆனால் எங்களுக்கு ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக ஆனார்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது ஏழைக் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட இரவும் பகலும் உழைத்து, தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்பினால், ஒரு நோய் அந்தக் குடும்பத்தைத் தாக்குகிறது, அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பாழாகின்றன. ஒட்டுமொத்த குடும்பத்தின் கடின உழைப்பும் வீணாகிறது. இந்த ஏழைக் குடும்பங்களின் சிகிச்சைக்கு ஏதாவது யோசிக்க முடியவில்லையா? அரசியலமைப்பு சட்டத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து, 50 முதல் 60 கோடி மக்களுக்கு இலவச சுகாதாரத்தை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். இன்று, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களின் சமூக வர்க்க வேறுபாடின்றி நாங்கள் இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் வழங்குவது பற்றி நாங்கள் பேசியபோது, அதுவும் கேலிக்குரியதானது. 25 கோடி மக்கள் வறுமையை வெல்வதில் வெற்றி பெற்றுள்ளனர் என்று நாங்கள் கூறும்போது, "நீங்கள் ஏன் இன்னும் ஏழைகளுக்கு ரேஷன் கொடுக்கிறீர்கள்?" என்று எங்களிடம்  கேட்கப்படுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

வறுமையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு உண்மை தெரியும். ஒரு நோயாளி குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது , மருத்துவர் அறிவுறுத்துகிறார், "வீட்டிற்குச் செல்லுங்கள், உங்கள் உடல்நிலை நன்றாக உள்ளது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது. ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்கு, எச்சரிக்கையாக இருங்கள், சில விஷயங்களைத் தவிர்க்கவும், இதனால் நீங்கள் மீண்டும் சிக்கலை சந்திக்க மாட்டீர்கள்”. அதேபோல், ஏழைகள் மீண்டும் வறுமையில் வீழ்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவசியம். அதனால்தான் அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வருகிறோம். இந்த முயற்சியை கேலி செய்யாதீர்கள், ஏனென்றால் நாங்கள் அவர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம், அவர்கள் மீண்டும் அதில் விழுவதை விரும்பவில்லை. இன்னும் வறுமையில் வாடுபவர்களை வெளியே கொண்டு வர நாங்கள் பாடுபடுவோம்.

 

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நம் நாட்டில், ஏழைகளின் பெயரில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏழைகளின் பெயரால்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் 2014 வரை, இந்த நாட்டின் 50 கோடி குடிமக்கள் ஒரு வங்கியின் கதவைக் கூட பார்த்ததில்லை.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

ஏழைகளுக்கு வங்கிக்குள் நுழையக் கூட வசதி இல்லை. ஆனால் தற்போது, 50 கோடி ஏழை குடிமக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதன் மூலம், ஏழைகளுக்காக வங்கிகளின் கதவுகளை திறந்துள்ளோம். அது மட்டுமல்ல, தில்லியிலிருந்து 1 ரூபாய் அனுப்பப்படும்போது, 15 பைசா மட்டுமே பெறுநருக்கு சென்றடைகிறது என்று ஒரு பிரதமர் கூறுவார். ஆனால் அதற்கான தீர்வை அவர்களால் ஒருபோதும் வழங்கப்படவில்லை. நாங்கள் வழி காட்டினோம், தற்போது தில்லியில் இருந்து 1 ரூபாய் அனுப்பப்படும் போது, அந்த 100 பைசாவும் ஏழைகளின் வங்கிக் கணக்கை அடைகிறது. ஏன்? ஏனென்றால், வங்கியை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது, எவ்வாறு முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் வழி காட்டினோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் வங்கியின் கதவுகளை அணுக கூட அனுமதிக்கப்படாதவர்கள், தற்போது, இந்த அரசின் மூலம் அரசியலமைப்பின் மீதான எங்கள் உறுதிப்பாட்டின் காரணமாக, அவர்கள் இப்போது வங்கியிலிருந்து எந்தவித பிணையும் இல்லாமல் கடன் பெற முடியும். இந்த அதிகாரம் எங்களால் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

இதன் காரணமாக "வறுமையை ஒழிப்போம்" என்ற முழக்கம் வெறும் முழக்கமாக மாறியது. இந்த துன்பத்திலிருந்து ஏழைகளை விடுவிப்பதே எங்கள் நோக்கம் மற்றும் உறுதிப்பாடு. இந்த இலக்கை நோக்கி நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம். யாருடைய பேச்சையும் கேட்காதவர்கள் இருந்த நிலையில், அந்தப் பேச்சை   மோடி கேட்கிறார், அக்கறை காட்டுகிறார்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

ஒவ்வொரு நாளும், நமது மாற்றுத்திறனாளிகள் போராடுகிறார்கள். இப்போதுதான் நமது மாற்றுத்திறனாளிகள், அவர்களது சக்கர நாற்காலிகளை ரயில் பெட்டிகள் வரை கொண்டு செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்கிறார்கள். சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் மீது நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்ததால் இந்த முறை உருவாக்கப்பட்டது. அவர்களின் நல்வாழ்வின் மீதான எங்கள் அக்கறைதான் இந்த மாற்றத்திற்கு வழிவகுத்தது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

மொழியின் மீது எவ்வாறு வாதிடுவது என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள், ஆனால் எனது 'மாற்றுத்திறனாளிகளுக்கு' இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி என்ன சொல்வது? உதாரணமாக, சைகை மொழி அமைப்பு, குறிப்பாக செவித்திறன் மற்றும் பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு! அசாமில் சைகை மொழியின் ஒரு வடிவமும், உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு வடிவமும், மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியும் கற்பிக்கப்பட்டது. நமது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பொதுவான சைகை மொழி இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், யாரும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஒருங்கிணைந்த சைகை மொழி அமைப்பை உருவாக்க நாங்கள் முன்முயற்சி எடுத்தோம். இது இப்போது என் நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கும் சேவை செய்து வருகிறது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

நமது சமூகத்தின் நாடோடி மற்றும் பழங்குடியின சமூகங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டன. இந்த மக்களைப் பராமரிப்பது அரசியலமைப்பின் முன்னுரிமை என்பதால், அவர்களின் நல்வாழ்வுக்காக ஒரு நலவாரியத்தை நிறுவ நாங்கள் முன்முயற்சி எடுத்தோம். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க நாங்கள் பணியாற்றினோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

ஒவ்வொரு பகுதியிலும், அடுக்குமாடி குடியிருப்பிலும், சமூகத்திலும் உள்ள தெருவோர வியாபாரிகளை எல்லோரும் அறிவார்கள். தினமும் காலையில், தெருவோர வியாபாரி வந்து கடினமாக உழைத்து, மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறார். இந்த மக்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அயராது உழைக்கிறார்கள். சில சமயங்களில் தங்களுக்குத் தேவையான வண்டிகளை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள், அதைக் கொண்டு பொருட்களை வாங்குகிறார்கள். மாலையில், அவர்கள் கடன் வாங்கிய தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு துண்டு ரொட்டி கூட வாங்க முடியவில்லை. இதுதான் அவர்களின் நிலை. எங்கள் அரசு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகளிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் பெற அனுமதித்தது. இதன் விளைவாக, அவர்கள் இந்த திட்டத்தின் மூன்றாவது சுற்றை எட்டியுள்ளனர். இப்போது வங்கியிலிருந்து நேரடியாக அதிகபட்ச கடன்களைப் பெறுகிறார்கள், இது அவர்களின் நற்பெயர், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்கிறது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

இந்த நாட்டில், விஸ்வகர்மாவின் சேவை தேவைப்படாதவர்கள் யாரும் இல்லை. சமூகத்தில் மிக முக்கியமான ஒரு அமைப்பு பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்தது. ஆனால் விஸ்வகர்மா சமூகம் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படவில்லை. விஸ்வகர்மா சமூகத்தின் நலனுக்காக நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம், வங்கிகளில் கடன் பெற ஏற்பாடு செய்தோம், அவர்களுக்கு புதிய பயிற்சி அளித்தோம், அவர்களுக்கு நவீன கருவிகளை வழங்கினோம், புதிய வடிவமைப்புகளை உருவாக்க அவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினோம், அவற்றை வலுப்படுத்தினோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

குடும்பத்தாலும், சமூகத்தாலும் நிராகரிக்கப்பட்ட, பராமரிக்க யாரும் இல்லாத திருநங்கை சமூகம், இப்போது நமது அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில்தான் அவர்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கியுள்ளோம். அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் அமைப்புகளை உருவாக்க நாங்கள் பணியாற்றியுள்ளோம், அவர்கள் மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதி செய்துள்ளோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,,

பழங்குடியின சமூகத்தைப் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். நான் குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, குஜராத்தின் கிழக்குப் பகுதி முழுவதும், கிராமம் முதல் அம்பாஜி வரை, பழங்குடியினரின் பகுதியாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. பழங்குடியினரான ஒரு காங்கிரஸ் முதலமைச்சர் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தாலும், இப்பகுதி முழுவதிலும் அறிவியல் பிரிவுடன் கூடிய ஒரு பள்ளி கூட இல்லை. அறிவியல் பாடப்பிரிவுகள் இல்லாத பள்ளிகள் இருக்கும்போது, இடஒதுக்கீடு பற்றி நீங்கள் எவ்வளவுதான் பேசினாலும், அந்தக் குழந்தைகள் எப்படி பொறியாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ ஆக முடியும்? நான் அந்த பிராந்தியத்தில் பணியாற்றினேன், இப்போது அறிவியல் துறைகளுடனட கூடிய பள்ளிகள் உள்ளன, பல்கலைக்கழகங்கள் கூட அங்கு நிறுவப்பட்டுள்ளன. அரசியலைப் பற்றி பேசுவது எளிதானது, ஆனால் அரசியலமைப்பின்படி செயல்படாதது அதிகாரத்தில் மட்டுமே அக்கறை கொண்டவர்களின் விளைவாகும். பழங்குடியின சமூகத்தில், நாங்கள் மிகவும் பின்தங்கிய பிரிவுகளை அடையாளம் கண்டு அவர்களுக்காக பணியாற்றினோம். நமது குடியரசுத்தலைவரின் வழிகாட்டுதலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதிலிருந்து, அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினரின்      மேம்பாட்டிற்கான பிரதமரின் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது, இது மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட பழங்குடியின மற்றும் பின்தங்கிய சமூகங்களின் சிறிய மற்றும் பின்தங்கிய குழுக்களை மையமாகக் கொண்டுள்ளது. அவர்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், அரசியல் பெரும்பாலும் அவர்களை புறக்கணித்தாலும், மோடி அவர்களை அணுகி, அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான பிரதமரின் பெருந்திட்டத்தின் மூலம், அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்தார்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

சமூகங்களின் வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும் என்பது போலவே, அரசியலமைப்பு மிகவும் பின்தங்கிய தனிநபர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி அதற்கேற்ப பொறுப்புகளை ஒதுக்குகிறது. அதேபோல், நாட்டின் எந்த பகுதியையும் விட்டுவிடக்கூடாது. கடந்த காலத்தில் நம் நாடு என்ன செய்தது? 60 ஆண்டுகளாக, 100 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. மேலும் "பின்தங்கிய மாவட்டங்கள்" என்ற இந்த முத்திரை மிகவும் களங்கப்படுத்தப்பட்டது, இடமாற்றம் நிகழும்போதெல்லாம், அது "தண்டனை பணியாக " பார்க்கப்பட்டது. பொறுப்பான எந்த அதிகாரியும் அங்கு செல்ல விரும்பவில்லை. இந்த முழு காட்சியையும் நாங்கள் மாற்றினோம். "முன்னேற விரும்பும் மாவட்டங்கள்" என்ற கருத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். 40 அளவுகோல்களின் அடிப்படையில் அவற்றை ஆன்லைனில் தொடர்ந்து கண்காணித்தோம். தற்போது, இந்த முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பல அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களின் நிலையை எட்டியுள்ளன. மேலும் சில தேசிய சராசரிக்கு இணையாகவும் உள்ளன. எந்த பகுதியையும் விட்டுவிடக்கூடாது. தற்போது, 500 வட்டங்களை "முன்னேற விரும்பும் வட்டங்கள்" என்று பெயரிட்டு, அவற்றின் வளர்ச்சியில் குறிப்பாக கவனம் செலுத்தி மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

பிரம்மாண்டமான கதைகளைச் சொல்பவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன் – பழங்குடியின சமூகம் 1947-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே இந்த நாட்டில் இருந்ததா? ராமர், கிருஷ்ணர் காலத்தில்  பழங்குடியின சமூகம் இல்லாமல் இருந்ததா? "ஆதிபுருஷ்" என்று நாம் குறிப்பிடும் பழங்குடியின சமூகம் எப்போதும் இருந்து வருகிறது. சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பிறகும், இவ்வளவு பெரிய பழங்குடியின சமூகத்திற்கு ஒரு தனி அமைச்சகம் கூட இல்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு பதவிக்கு வந்தபோதுதான் பழங்குடியினர் நலனுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. பழங்குடியின சமூகத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

 

நமது மீனவர் சங்கமான மச்சிவரர் சமூகம் சமீபத்தில் தோன்றியதா? அவர்களின் அவல நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா? மீனவ சமுதாயத்தின் நலனுக்காக முதன்முதலாக மீன்வளத்துறைக்கென தனியாக அமைச்சகத்தை எனது அரசு உருவாக்கியது. அவர்களின் அபிவிருத்திக்காக ஒரு பிரத்யேக வரவு செலவுத் திட்டத்தை ஒதுக்கினோம், இந்த சமூகத்தின் கவலைகளையும் நிவர்த்தி செய்தோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

நமது நாட்டின் சிறு விவசாயிகள் கூட்டுறவுகளை தங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக பெரிதும் நம்பியுள்ளனர். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க, கூட்டுறவுத் துறையை மேலும் திறமையானதாகவும், வலுவானதாகவும் மாற்றுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டோம். சிறு விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு தனி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கினோம். சவால்களை எதிர்கொள்வதற்கான எங்கள் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது. அதேபோல், நமது நாட்டின் இளைஞர்கள்தான் நமது பலம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். முழு உலக நாடுகளும் ஒரு திறமையான தொழிலாளர் சக்தியை உருவாக்க முயற்சிக்கும் போது, மக்கள்தொகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. உலகளாவிய தொழிலாளர் சக்திக்கு நமது இளைஞர்களைத் தயார்படுத்துவதற்காக, உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப நமது இளையோரை திறன்களுடன் ஆயத்தப்படுத்தவும், அவர்கள் உலக அரங்கில் உயரவும் செழிக்கவும் உதவும் வகையில் திறன் மேம்பாட்டுக்கான தனி அமைச்சகத்தை நாங்கள் நிறுவியுள்ளோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

நமது வடகிழக்கு பிராந்தியத்தில் குறைவான வாக்குகள் அல்லது குறைவான தொகுதிகள் இருப்பதால் யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அடல் அவர்களின் அரசுதான் முதல் முறையாக வடகிழக்குப் பகுதியின் நலனுக்காக ஒரு பிரத்யேக அமைச்சகத்தை உருவாக்கியது. அந்த முயற்சியின் பலன்களை தற்போது நாம் கண்கூடாகக் காண்கிறோம், வடகிழக்கில் வளர்ச்சிக்கான புதிய வழிகள் எட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தப் பிராந்தியத்தில் ரயில் போக்குவரத்து, சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வேகமாக முன்னேறி வருகின்றன.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

தற்போதும், வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் நிலப்பதிவுகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன. நமது கிராமங்களில், ஒரு சாதாரண நபர் பெரும்பாலும் தங்கள் நிலம் அல்லது வீட்டிற்கான முறையான உரிமை ஆவணங்களை வைத்திருப்பதில்லை. இதனால், வங்கிகளில் கடன் பெறுவது, ஆக்கிரமிப்பில் இருந்து தங்கள் சொத்துக்களை பாதுகாப்பது போன்ற சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இதை நிவர்த்தி செய்வதற்காக, ஸ்வாமித்வா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இந்த முயற்சியின் மூலம், கிராமங்களில் உள்ள விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய தனிநபர்களுக்கு உரிமை ஆவணங்களை வழங்குகிறோம், இதன் மூலம் அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உரிமைகளை வழங்குகிறோம். இந்த ஸ்வமித்வா யோஜனா ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கை என்பதை நிரூபித்துள்ளதுடன், அத்தகைய நபர்களுக்கு அதிகாரம் அளிக்க புதிய திசையை அளிக்கிறது.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அனைத்து முயற்சிகளின் காரணமாக, ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் அயராது உழைத்துள்ளோம். பின்தங்கிய மக்களிடையே புதிய தன்னம்பிக்கையை விதைத்து, சரியான திசையில் அவர்களை வழிநடத்தி வருகிறோம். இதன் விளைவாக, மிகக் குறுகிய காலத்தில், எனது நாட்டுமக்களில் 25 கோடி பேர் வறுமையை வெற்றிகரமாக வென்றுள்ளனர். இந்த சாதனை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்த நான் தலை வணங்குகிறேன். அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் நாங்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளோம், மேலும் இந்த பணியைத் தொடர நான் உறுதிபூண்டுள்ளேன்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்று நாம் பேசும்போது, அது வெறும் முழக்கம் மட்டுமல்ல; அது நமது விசுவாசப் பிரமாணம். அதனால்தான், அரசியலமைப்பு பாரபட்சத்தை அனுமதிக்காததால், எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த நாங்கள் பணியாற்றினோம். ஒவ்வொரு திட்டத்தின் பலன்களும் தகுதியான 100% பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்து, நிர்வாகத்தில் சீரமைப்பு என்ற யோசனையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். உண்மையான மதச்சார்பின்மை இருக்கிறது என்றால், அது இந்த சீரமைப்பு அணுகுமுறையில் உள்ளது. உண்மையான சமூக நீதி இருந்தால், அது பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்வதில் உள்ளது. இந்த உணர்வோடுதான் உண்மையான மதச்சார்பின்மைக்கும், உண்மையான சமூக நீதிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கிறோம், பணியாற்றுகிறோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

நமது அரசியலமைப்பின் மற்றொரு இன்றியமையாத உணர்வு, நமது தேசத்தை வழிநடத்துவதற்கும் முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கும் அதன் திறன் ஆகும். நாட்டின் திசையை வடிவமைப்பதற்கான உந்து சக்தியாக அரசியல் பெரும்பாலும் மையத்தில் உள்ளது. எதிர் வரும் காலங்களில் நமது ஜனநாயகத்தின் போக்கு மற்றும் நமது அரசியலின் எதிர்காலப் போக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தற்போது நாம் சிந்தித்து விவாதிக்க வேண்டும்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

சில அரசியல் கட்சிகள், தங்கள் சுயநலம் மற்றும் அதிகார தாகத்தால் உந்தப்பட்டு, ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு மறைக்கப்பட்ட சூழலை உருவாக்கியுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன் – குடும்ப பரம்பரையைப் பொருட்படுத்தாமல் திறமையான தலைமைக்கு இந்த நாட்டில் நியாயமான வாய்ப்பு இருக்க வேண்டாமா? அரசியல் குடும்பங்களில் இருந்து வராதவர்களுக்கு அரசியலின் கதவுகள் மூடப்பட வேண்டுமா? குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? வாரிசு அரசியலின் பிடியிலிருந்து இந்திய ஜனநாயகத்தை விடுவிப்பது நமது அரசியல் சாசனக் கடமை அல்லவா? குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் என்பது ஒரு குடும்பத்தை மட்டுமே சுற்றியே சுழல்கிறது. ஒவ்வொரு முடிவும் கொள்கையும் அவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், திறமையான இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், அரசியல் கட்சிகள் எந்தவொரு அரசியல் வம்சாவளியும் இல்லாத நபர்களை தங்கள் அணிகளில் வரவேற்க வேண்டுமென்றே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டையிலிருந்து, இந்தப் பிரச்சினையை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். நான் தொடர்ந்து அவ்வாறு செய்வேன். அரசியல் குடும்பப் பின்னணி இல்லாத 1,00,000 இளைஞர்களை அரசியல் களத்திற்குள் கொண்டு வருவதே எனது குறிக்கோள். நாட்டிற்கு தூய்மையான காற்று, புதுப்பிக்கப்பட்ட உத்வேகம், நாட்டை முன்னெடுத்துச் செல்ல புதிய உறுதிப்பாடுகள் மற்றும் கனவுகளைக் கொண்ட இளைஞர்கள் தேவை. நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த திசையில் நாம் தீர்க்கமாக முன்னேறுவோம்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

ஒருமுறை நான் செங்கோட்டையிலிருந்து நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடமைகள் பற்றிப் பேசியதை நான் நினைவு கூர்கிறேன். அப்போது கடமைகள் என்ற கோட்பாடு கூட சிலரால் கேலி செய்யப்பட்டதைக் கண்டு நான் வியப்படைந்தேன். ஒருவரின் கடமைகளை நிறைவேற்றும் எண்ணத்தில் இந்த உலகில் யாரும் தவறு கண்டுபிடிப்பதை கற்பனை செய்வது கடினம். ஆனாலும், எதிர்பாராதவிதமாக, இந்த அடிப்படைக் கொள்கையைக் கூட கேலி செய்பவர்கள் உள்ளனர். நமது அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அது நமது கடமைகளை நிலைநிறுத்தவும் எதிர்பார்க்கிறது. நமது நாகரிகத்தின் சாராம்சம் தர்மத்தில், நமது பொறுப்புகளில், நமது கடமை உணர்வில் உள்ளது. மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னார். அதை நான் மேற்கோள் காட்டுகிறேன் - "ஒருவர் தனது கடமைகளை விசுவாசமாக நிறைவேற்றுவதிலிருந்தே உரிமைகள் இயல்பாகவே ஏற்படுகின்றன என்பதை படிக்காத ஆனால் புத்திசாலித்தனமான என் தாயிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்று மகாத்மா காந்தி கூறினார். காந்திஜியின் செய்தியின் அடிப்படையில் நாம் நமது அடிப்படைக் கடமைகளை முழு மனதுடன் நிறைவேற்றினால், நாட்டை 'வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதில் இருந்து எதுவும் நம்மைத் தடுக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில், இந்த மைல்கல், நமது கடமைகள் மீதான நமது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட அழைப்பாக அமையட்டும். இது காலத்தின் தேவை.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் ஈர்க்கப்பட்டு, பாரதத்தின் எதிர்காலத்திற்காக இந்த மதிப்பிற்குரிய அவையின் முன் 11 தீர்மானங்களை முன்வைக்க நான் விரும்புகிறேன்:

1. முதல் தீர்மானம்: குடிமக்களாக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி, அனைவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

2. இரண்டாவது தீர்மானம்: ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு சமூகமும் வளர்ச்சியின் மூலம் பயனடைய வேண்டும், 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. மூன்றாவது தீர்மானம்: ஊழலை எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது.  ஊழல் நபர்களை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.

4. நான்காவது தீர்மானம்: குடிமக்கள் நாட்டின் சட்டங்கள், விதிகள் மற்றும் மரபுகளைக் கடைப்பிடிப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

 

5. ஐந்தாவது தீர்மானம்: நாம் அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுபட்டு, நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும்.

6. ஆறாவது தீர்மானம்: நாட்டின் அரசியல் வாரிசு ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும்.

7. ஏழாவது தீர்மானம்: அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும், அதை அரசியல் ஆதாயத்திற்கான கருவியாகப் பயன்படுத்தக்கூடாது.

8. எட்டாவது தீர்மானம்: அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்தும் அதே வேளையில், இடஒதுக்கீடு பெறுபவர்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, மேலும் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை உருவாக்கும் அனைத்து முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.

9. ஒன்பதாவது தீர்மானம்: பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா உலகளவில் முன்மாதிரியாக மாற வேண்டும்.

10. பத்தாவது தீர்மானம்: மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இதுவே முன்னேற்றத்திற்கான நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

11. பதினோராவது தீர்மானம்: 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற இலக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு  மக்களவைத் தலைவர் அவர்களே,, 

இந்த தீர்மானத்தின் மூலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால், அரசியலமைப்பின் உள்ளார்ந்த உணர்வு, 'மக்களாகிய நாம்' மற்றும் 'அனைவரும் இணைவோம்' (கூட்டு முயற்சி) ஆகியவை 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவை நோக்கி நம்மை வழிநடத்தும். இந்தக் கனவை இந்த அவையில் உள்ள ஒவ்வொருவரும், நாட்டின் 140 கோடி குடிமக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாடு ஒரு உறுதியான தீர்மானத்துடன் களத்தில் இறங்கும்போது, அது விரும்பிய பலன்களை நிச்சயம் அடையும். நமது நாட்டின் 140 கோடி குடிமக்கள் மீதும், அவர்களின் வலிமைக்காகவும், 'இளைஞர் சக்தி' மீதும், 'பெண் சக்தி' மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால்தான் நான் கூறுகிறேன், 2047-ம் ஆண்டில், நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, இந்தியா 'வளர்ச்சியடைந்த இந்தியா'வாகக் கொண்டாடப்படும். இந்த உறுதியுடன், நாம் முன்னேறிச் செல்வோம். இந்த மகத்தான புனிதமான பணியை முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரத்தை நீட்டித்ததற்காக மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி.

***

TS/PKV/SMB/PLM/IR/KPG/RR/AG/KR/DL

 


(Release ID: 2085799) Visitor Counter : 7