இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடல் திறன் இந்தியா இயக்க சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 17 DEC 2024 3:33PM by PIB Chennai

நாட்டில் ஆரோக்கியமான, பசுமையான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று காலை 'உடல் திறன்  இந்தியா இயக்க சைக்கிள் பேரணி' தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்சா நிகில் காட்சே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா மற்றும் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  தங்கப் பதக்கமும் வென்ற சிம்ரன் சர்மா உள்ளிட்ட பிரபல விளையாட்டு வீரர்கள் முன்னிலையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் ஓட்டுதலை நிலையான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மைதானத்திலிருந்து ரைசினா ஹில்ஸ் வரை இந்த 3 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம் நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் பயண ஆர்வலர்கள் இதில் இணைந்தனர்.

சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், "நாங்கள் இந்த நிகழ்வை 'செவ்வாய்கிழமைகளில் உடல் திறன்  இந்தியா சைக்கிள் ஓட்டுதல்' என்று தொடங்கியுள்ளோம், ஆனால், சைக்கிள் ஆர்வலர்களின் வசதிக்காக, இது இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் என்றும் இப்போது 'ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிளில்' என்று அழைக்கப்படுவதாக தெரிவித்தார். தில்லியில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், பெருநிறுவன தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு மணி நேரம் சைக்கிள் பயணம் செய்வார்கள். சைக்கிள் ஓட்டுதல் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது, இது மாசுபாட்டிற்கான தீர்வு மற்றும் நிலைத்தன்மைக்கும் பங்களிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 உடல் திறன் இந்தியா இயக்கத்தால், நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085213

***

TS/IR/KV/DL


(Release ID: 2085373) Visitor Counter : 29