மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன் இந்தியா ஹேக்கத்தான் 2024-ன் மாபெரும் இறுதி நாள் நிகழ்ச்சியை திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

Posted On: 11 DEC 2024 2:36PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-ன் மாபெரும் இறுதிநாள் நிகழ்ச்சியை  காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய வடகிழக்கு பிராந்திய கல்வி மற்றும் மேம்பாட்டுத் துறை இணைமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார்  இதில் கலந்து கொண்டார். மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் குமார்,  தேசிய தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் தலைவர், பேராசிரியர் அனில் சகஸ்ரபுதே, அகில இந்திய  தொழில்நுட்பக் கல்விக் கழக துணைத் தலைவர் டாக்டர் அபய் ஜெரே மற்றும் உயர் அதிகாரிகள்  உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அகில இந்திய  தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம், பிற கல்வியாளர்கள், மாணவர்கள், வழிகாட்டிகள் ஆகியோர் காணொளி  மூலம் பல்வேறு மையங்களில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் 51 இடங்களிலிருந்து நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், நவீன இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி, புதுமை மற்றும் படைப்பாற்றலின் மையமாக உருவெடுத்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்ட மாணவர்கள் உத்வேகத்துடன் உள்ளனர் என்றும் அவர்களது கண்டுபிடிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை உலகின் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகளைக் காண உதவிடும் என்று அவர் கூறினார்.

திறன் வாய்ந்த இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வை, கடின உழைப்பு, தலைமைப் பண்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவை 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய வழி வகுக்கும் என்று அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083154

----

TS/SV/KPG/DL


(Release ID: 2083473) Visitor Counter : 12