குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

Posted On: 10 DEC 2024 1:37PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 10, 2024) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில்  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, அனுதாபம், இரக்கம் மற்றும் இணக்கமான சமூகத்தில் உள்ள தனிநபர்களின் பரஸ்பர பிணைப்பு ஆகிய மதிப்புகளை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது என்று கூறினார். இந்த அம்சங்களின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் போன்ற நிறுவனங்கள், சிவில் சமூகம், மனித உரிமை பாதுகாவலர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து அனைவருக்கும் மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பணியாற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.  விதிமீறல்களை நிவர்த்தி செய்வதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்த கொள்கை மாற்றங்களை பரிந்துரைப்பதிலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

அனைத்து குடிமக்களுக்கும், குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதில்  நாடு உறுதியாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். வீட்டுவசதி, தூய்மையான குடிநீர், மேம்பட்ட சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நிதி சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் கல்வி வரை பல சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அடிப்படைத் தேவைகளை வழங்குவது உரிமைகளின் அம்சமாகப் காணப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறும்போது, உருவாகி வரும் சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தற்போது நமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெற்று, பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதுடன், பல புதிய பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

உலக அளவில் மனித உரிமைகள் சிந்தனையை மறுபரிசீலனை செய்ய பருவநிலை மாற்றம் நம்மை கட்டாயப்படுத்துகிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

சமீப ஆண்டுகளில், மனநலம் என்பது குறிப்பாக நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக மாறியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் மன அழுத்தத்தைத் தணிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

***

(Release ID: 2082644)

TS/IR/AG/KR


(Release ID: 2082675) Visitor Counter : 32