உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி

Posted On: 02 DEC 2024 11:51AM by PIB Chennai

கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட இயற்கை உணவுப் பொருட்களின் மொத்த அளவு:

வரிசை எண்

ஆண்டு

அளவு (மெட்ரிக் டன்)

மதிப்பு (அமெரிக்க டாலர்  மில்லியன்)

1.

2019-20

638998.42

689.10

2.

2020-21

888179.68

1040.95

3.

2021-22

460320.40

771.96

4.

2022-23

312800.51

708.33

5.

2023-24

261029.00

494.80

6.

2024-25*

263050.11

447.73

 

ஆதாரம்: ட்ரேஸ்நெட்டில்கரிம உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்புகளால் வழங்கப்பட்ட தகவல்கள்

*: ஏற்றுமதி 25.11.2024 வரை

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்காக எந்த குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கவில்லை. எனினும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா)  இயற்கை உணவுப் பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் உட்பட அதன் உறுப்பு ஏற்றுமதியாளர்களுக்கு கீழ்காணும் செயல்பாடுகளுக்கு  நிதி உதவிகளை வழங்குகிறது:

(i) ஏற்றுமதி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

(ii) தர மேம்பாடு

(iii) சந்தை அபிவிருத்தி

மேலும், அபெடா அமைப்பானது இயற்கை உணவு உற்பத்திக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டம் சான்றிதழ் வழங்கும் அமைப்புகளின் அங்கீகாரம், இயற்கை உணவு உற்பத்திக்கான தர நிர்ணயம், இயற்கை வேளாண்மை மற்றும் சந்தைப்படுத்துதலை ஊக்குவித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இயற்கை உணவு உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் கீழ், செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உற்பத்தி, செயலாக்கம் மற்றும் வர்த்தகம் போன்ற செயல்பாட்டு நோக்கத்திற்கு ஏற்ப சான்றளிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இத்திட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்ட பதப்படுத்தும் மையங்களின் மொத்த எண்ணிக்கை 1016 ஆகும். இதில் தமிழ்நாட்டில் 88 மையங்களும், புதுச்சேரியில் 1 மையமும் அடங்கும். அதிகபட்சமாக கர்நாடகாவில் 127 மையங்களும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் முறையே 122 மற்றும் 113 மையங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திரு. நவ்னீத் சிங் பிட்டுன் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079635

***

TS/BR/DL


(Release ID: 2079878) Visitor Counter : 29