தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் பிலிப் நோய்ஸ்-க்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிலிப் நோய்ஸ்-க்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஏஞ்சலினா ஜோலி நடித்த சால்ட், ஹாரிசன் ஃபோர்ட் நடித்த பேட்ரியாட் கேம்ஸ் மற்றும் டென்சல் வாஷிங்டன் நடித்த தி போன் கலெக்டர் போன்ற படங்களின் இயக்குநராக நோய்ஸ் பிரபலமடைந்துள்ளார்.
இந்த விருதில் வெள்ளி மயில் பதக்கம், சான்றிதழ், சால்வை, பாராட்டுச் சுருள் மற்றும் 10,00,000 ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.
கோவாவில் உள்ள கலா அகாடமியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், "நியூ ஹாலிவுட்டில் வெற்றி பெறுவது எப்படி" என்பது குறித்த சிறப்பு விளக்கத்தையும் பிரபல திரைப்பட இயக்குனரான நோய்ஸ் வழங்கினார்.
***
(Release ID: 2078694)
TS/SV/RR/KR
(Release ID: 2078940)