இடுகை இடப்பட்ட நாள்:
29 NOV 2024 11:45AM by PIB Chennai
சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பதிவிற்கு பதிலளித்துள்ள திரு மோடி கூறியுள்ளதாவது:-
"சுற்றுலா பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. #IncredibleIndia வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை அதிகமான எண்ணிக்கையில் மக்கள் அனுபவிப்பதை உறுதிசெய்ய, இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் எங்கள் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்."
***
(Release ID: 2078863)
TS/PKV/AG/KR