தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐ.சி.எஃப்.டி. - யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஸ்பெயின் திரைப்பட இயக்குனர் லெவன் அகினின் 'கிராசிங்' பெற்றது
கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெயின் திரைப்பட தயாரிப்பாளர் லெவன் அகின் புகழ்பெற்ற ஐ.சி.எஃப்.டி -யுனெஸ்கோ காந்தி விருதை வென்றார். அமைதி, அகிம்சை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மாண்புகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த திரைப்படத்தை அங்கீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட கிராசிங் திரைப்படத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கிராசிங் திரைப்படத்தில் பாலின சமத்துவம் மற்றும் சமூக புரிதல் குறித்த சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்காக நடுவர் குழு பாராட்டு தெரிவித்துள்ளது . நடுவர்கள் தெரிவித்த பாராட்டுரையில் "அன்பு மற்றும் புரிதலைப் பற்றிய ஒரு அற்புதமான சினிமா," என்று கூறப்பட்டுள்ளது.
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஒளி ஒலி, தகவல் தொடர்புக்கான சர்வதேச குழுமம் – யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து ஏற்படுத்தப்பட்ட இந்த விருது, சகிப்புத்தன்மை, கலாச்சாரங்களுக்கிடையேயான கலந்துரையாடல், அமைதி போன்ற கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ள திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மருமகளைக் கண்டுபிடிப்பதற்காக ஜார்ஜியாவிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு வரும் ஒரு இளைஞனுடன் பயணத்தைத் தொடங்கும் ஒரு வயதான பெண்ணின் கதையை இந்த கிராசிங் திரைப்படம் சொல்கிறது. காதல், புரிதல் மற்றும் தலைமுறைகளைக் கடந்து செல்லும் தொடர்புகள் குறித்த இந்த கதை சமூக மற்றும் கலாச்சார கருப்பொருள்களில் உயிரோட்டமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
***
(Release ID: 2078677)
TS/SV/RR/KR
(Release ID: 2078896)
Visitor Counter : 41