தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் சிறந்த ஓ.டி.டி வெப் தொடர் விருதுக்கு பத்து படைப்புகள் போட்டியிடுகின்றன
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) 55-வது பதிப்பின் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பில், சிறந்த ஓ.டி.டி வலைத் தொடர் விருது 2024 க்கான நடுவர் குழுவின் உறுப்பினர்கள் பி.ஐ.பி ஊடக மையத்தில் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கில் ஊடகங்களுடன் உரையாடினர்.
நடுவர் குழுவின் தலைவர் திரு மதுர் பண்டார்கர் தனது துவக்க உரையில், "கலைக்கு வரம்புகள் இல்லை. அதற்கு எல்லைகள் இல்லை. நீங்கள் இணைகிறீர்கள். அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று உலகம் முழுவதும் நடந்த மிகச் சிறந்த விஷயம் இதுதான் என்று நான் நினைக்கிறேன். உணர்ச்சியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியின் அறிவு தேவையில்லை, ஏனெனில் வசன வரிகளும் உள்ளன. இதனால் உணர்ச்சிகள் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன”, என்று கூறினார்.
சிறந்த பத்து தேர்வுகளில் இருந்து ஒரே ஒரு படைப்பைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமங்களை நடுவர்மன்ற உறுப்பினர்கள் பட்டியலிட்டனர். சிறந்த ஓ.டி.டி வலைத் தொடர் விருது 2024 நடுவர் குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது:
1. திரு. மதுர் பண்டார்கர் (தலைவர்), திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
2. திரு. கிருஷ்ணா ஹெப்பலே, நடிகர்
3. திருமதி ரூபாலி கங்குலி, நடிகர்
4. திரு. ஹரிஷ் சங்கர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
பொழுதுபோக்குத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அங்கீகரித்து, குறிப்பாக ஓவர்-தி-டாப் (ஓ.டி.டி) இயங்குதளங்களின் எழுச்சியுடன், ஐ.எஃப்.எஃப்.ஐ (2023) இன் 54-வது பதிப்பில் சிறந்த வலைத் தொடர் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது ஓ.டி.டி தளங்களில் வளர்ந்து வரும் உள்ளடக்கத்தையும் அதன் படைப்பாளர்களையும் அங்கீகரிப்பது, ஊக்குவிப்பது, கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு விருதுக்கு பத்து படைப்புகள் போட்டியிடுகின்றன. இன்று மாலை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078655
***
(Release ID: 2078655)
TS/BR/KR
(Release ID: 2078877)
Visitor Counter : 38