பிரதமர் அலுவலகம்
இந்திய மற்றும் பிரதமரின் லெவன் கிரிக்கெட் அணியினருடனான ஆஸ்திரேலிய பிரதமரின் சந்திப்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2024 6:50PM by PIB Chennai
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிரதமரின் லெவன் கிரிக்கெட் அணியினரை இன்று சந்தித்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டித் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது சிறந்த நண்பரான பிரதமர் அலபனீஸ்@AlboMP, இந்திய மற்றும் பிரதமரின் லெவன் அணிகளுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு சிறந்த தொடக்கத்தை அமைத்துள்ளது, மேலும், 140 கோடி இந்தியர்களும், இந்திய அணியினருக்கு ஆதரவாக உள்ளனர்.
இனி வரும் போட்டிகளைக் காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
***
TS/MM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2078738)
வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam