தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா: ஒரு முன்னோட்டம்
55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 28, 2024 அன்று கோவாவின் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் நிறைவு விழாவுடன் நிறைவடைய உள்ளது.
ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் விழா சினிமா நுண்ணறிவின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. கதை சொல்லும் கலையையும் உலகளாவிய சினிமாவின் உணர்வையும் கொண்டாடியது. 75 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான திரைப்படங்கள், தொழில்துறை ஜாம்பவான்களின் மாஸ்டர் வகுப்புகள், ஊக்கமளிக்கும் குழு விவாதங்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா சினிமாவின் ஒன்றிணைக்கும் சக்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நிறைவு விழாவில் ஏராளமான திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். சுகுமார், தில் ராஜு, ஆனந்த் திவாரி, அம்ரித்பால் சிங் பித்ரா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் வோலி போன்ற புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இந்த நட்சத்திர வரிசையில் உள்ளனர்.
பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெயப்பிரதா, ஸ்ரேயா சரண், பிரதிக் காந்தி, சமீர் கோச்சார், ஸ்ரேயா சவுத்ரி, ரித்விக் பவுமிக், நவீன் கோலி ஆகியோருடன் பிரபல இசைக்கலைஞர்கள் அமல் மல்லிக், மாமே கான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மாலையில் புகழ்பெற்ற பாடகர்களான ஸ்டெபின் பென், பூமி திரிவேதி, அமால் மாலிக் மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் நிகிதா காந்தி, திக்விஜய் சிங் பரியார் ஆகியோரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
சினிமாவில் சிறந்து விளங்குபவர்களை கௌரவித்தல், ஐ.எஃப்.எஃப்.ஐயின் மிகவும் மதிப்புமிக்க தங்கமயில் விருது, கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு நிறைவு விழாவில் வழங்கப்படும். சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக திரைப்படம் ஆகியவற்றுக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்படும், வெற்றியாளர்களுக்கு வெள்ளி மயில் கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும். இவை தவிர, திரைப்படத் தயாரிப்பில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் சிறப்பு ஜூரி விருது, வெள்ளி மயில் கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஆடியோவிஷுவல் கம்யூனிகேஷன் (ஐ.சி.எஃப்.டி) ஆகியவற்றுக்கான சர்வதேச கவுன்சிலுடன் (ஐ.சி.எஃப்.டி) இணைந்து, சகிப்புத்தன்மை, கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல், அமைதி ஆகியவற்றின் கொள்கைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களை கௌரவிக்கும் ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் நிறைவு விழாவில் வழங்கப்படும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பிலிப் நாய்ஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது, இதில் வெள்ளி மயில் பதக்கம், சான்றிதழ், பொன்னாடை, ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.
புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த வெப் சீரிஸ் (ஓடிடி) விருதும் வழங்கப்பட உள்ளது.
நிறைவு விழாவில் புகழ்பெற்ற இந்திய இயக்குனர் ரமேஷ் சிப்பி, நடிகர்-தயாரிப்பாளர் நிவின் பாலி மற்றும் நடிகர் பிரதிக் காந்தி போன்ற தொழில்துறை ஜாம்பவான்களுடன் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
நாட்டின் வளமான நடன பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் "ரிதம்ஸ் ஆஃப் இந்தியா" என்ற தலைப்பில் கதக் (வட இந்தியா), மோகினியாட்டம் & கதகளி (தென்னிந்தியா), மணிப்புரி & புங் டிரம்மர்கள் (கிழக்கு இந்தியா) கர்பா (மேற்கு இந்தியா) போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
***
(Release ID: 2078214)
AD/SMB/KR
(Release ID: 2078338)
Visitor Counter : 12