தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர்கள் ஈட்டுறுதி கழகமானது ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கத்துடன் இணைந்து செயல்படும்

Posted On: 28 NOV 2024 10:41AM by PIB Chennai

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, சுகாதார நலன், மருத்துவ பராமரிப்பை உறுதி செய்வது என்பது 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான' இலக்கை நோக்கி தொழிலாளர் சக்தி பயணிப்பதை மேம்படுத்தும்.

இந்தச் சூழலில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தை ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி 14.43 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் பயனாளிகளுக்கு உதவும். நாடு முழுவதும் தரமான, முழுமையான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு இது வகை செய்கிறது.

இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் தொழிலாளர் ஈட்டுறுதி கழக பயனாளிகள் மருத்துவச் சிகிச்சைகளை பெற வழிவகை செய்யும் என்று இஎஸ்ஐசி தலைமை இயக்குநர் திரு அசோக் குமார் சிங் தெரிவித்தார். இந்த இணைப்பு மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளை குறைப்பதுடன் அனைத்து விதமான சுகாதார வசதிகளையும் உறுதி செய்கிறது.

இதில் 165 மருத்துவமனைகள், 1590 மருந்தகங்கள், 105 மருந்தகம் மற்றும் கிளை அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 2900 தனியார் மருத்துவமனைகளில் தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் தற்போது நாட்டில் மொத்தம் உள்ள 788 மாவட்டங்களில் 687 மாவட்டங்களில் (2014-ல் 393 மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் இருந்தது) இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

***

(Release ID: 2078254)
TS/SV/RR/KR

 


(Release ID: 2078301) Visitor Counter : 15