மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேதியியல் கவுன்சில், ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை வென்றது

प्रविष्टि तिथि: 27 NOV 2024 2:39PM by PIB Chennai

2024 ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருது இந்திய வேதியியல் கவுன்சிலுக்கு (ICC) 2024 நவம்பர் 25 அன்று ஹேக்கில் நடந்த ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) மாநாட்டில் 29-வது அமர்வின் போது உலகளாவிய ரசாயனத் தொழில்துறையின் நிபுணர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஒரு ரசாயன தொழில் அமைப்பின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்து இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஓபிசிடபிள்யூ தலைமை இயக்குநர் திரு பெர்னாண்டோ அரியாஸும் ஹேக் நகர மேயர் திரு ஜான் வான் ஜானென்னும் இந்த விருதை வழங்கினர்.

இந்திய வேதியியல் கவுன்சில் சார்பில், அதன் தலைமை இயக்குநர் டி.சோதி செல்வம் இந்த விருதை பெற்றுக்கொண்டார். விருது வழங்கும் விழாவில் ஓபிசிடபிள்யூ-க்கான இந்தியாவின் தூதர், நிரந்தர பிரதிநிதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓபிசிடபிள்யூ என்பது ரசாயன ஆயுதங்கள் தடை தொடர்பான  செயல்பாடுகளை மையமாகக் கொண்ட  அமைப்பாகும். இது ரசாயன ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடையும் நோக்கத்துடன் செயல்படுகிறது. 1997இல் நடைமுறைக்கு வந்த ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்ட நாடாக இந்தியா உள்ளது. என்ஏசிடபிள்யூ என்பது இந்தியாவில் உடன்படிக்கையை செயல்படுத்தும் தேசிய அதிகார அமைப்பாகும்.

2013-ம் ஆண்டில், ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் விரிவான முயற்சிகளுக்காக ஓபிசிடபிள்யூ-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த சாதனையின் மரபைப் பாதுகாக்க, ஓபிசிடபிள்யூ 2014-ல் ஹேக் நகராட்சியுடன் இணைந்து ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை' நிறுவியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077867

 

----

TS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2077921) आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia