பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 NOV 2024 8:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், வருமான வரித்துறையின் பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1435 கோடியாகும்.

நிரந்தர கணக்கு எண் 2.0 திட்டமானது வரி செலுத்துனர் பதிவு சேவைகளின் தொழில்நுட்ப உந்துதல் மாற்றத்தை செயல்படுத்துவதுடன், பின்வருவனவற்றை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நன்மைகளையும் கொண்டுள்ளது:

i.             மேம்பட்ட தரத்துடன் எளிதான அணுகல் மற்றும் விரைவான சேவையை வழங்குதல்;

ii.            உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரம்

           Iiiசுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்முறைகள் மற்றும் செலவு மேம்பாடு; மற்றும்

iv           பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தி சுறுசுறுப்பாக செயல்படுதல்.

பான் 2.0 திட்டம் என்பது வரி செலுத்துவோரின் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்திற்காக பான் / டான் சேவைகளின் தொழில்நுட்ப உந்துதல் மாற்றம் மூலம் வரி செலுத்துவோர் பதிவு சேவைகளின் வணிக செயல்முறைகளை மறுவடிவமைப்பதற்கான ஒரு மின்-ஆளுமை திட்டமாகும். இது தற்போதைய பான் / டான் 1.0 சூழலியலின்  மேம்படுத்தலாக இருக்கும், இது அடிப்படை மற்றும் அடிப்படை அல்லாத பான் / டான் செயல்பாடுகள் மற்றும் பான் சரிபார்ப்பு சேவையை  ஒருங்கிணைக்கிறது.

குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக பான் பயன்பாட்டை செயல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கான அரசின் தொலைநோக்குடன் பான் 2.0 திட்டம் ஒத்திசைவானதாக இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077104    

***

(Release ID: 2077104)

TS/BR/KR

 


(Release ID: 2077350) Visitor Counter : 20