இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

75 வது அரசியலமைப்பு தினத்திற்கு முன்னதாக மை பாரத் இளைஞர் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த நமது அரசியலமைப்பு நமது சுய மரியாதை பாதயாத்திரையில் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார்

புதிய இந்தியாவின் இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை இலக்காக கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்கின்றனர்: டாக்டர் மாண்டவியா

தில்லியில் நடைபெற்ற நமது அரசியலமைப்பு நமது சுய மரியாதை பாதயாத்திரையில் 10,000 க்கும் மேற்பட்ட மை பாரத் இளம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்

75-வது அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அரசியலமைப்பு தின பாதயாத்திரையில் தூய்மை இயக்கத்தை தன்னார்வலர்கள் முன்னின்று நடத்தினர்

Posted On: 25 NOV 2024 2:45PM by PIB Chennai

நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் இன்று மை பாரத் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்த பாதயாத்திரையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். நமது அரசியலமைப்பு நமது சுய மரியாதை என்ற கருப்பொருளில் மேஜர் தியான் சந்த் அரங்கில் தொடங்கிய பாதயாத்திரை, கடமைப் பாதை மற்றும் இந்தியா கேட் வழியாக சென்றது. இந்த பாதயாத்திரையில்10,000-க்கும் மேற்பட்ட மை பாரத் இளம் தன்னார்வலர்கள்மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அன்னையின் பெயரில் மரம் நடுவோம் திட்டத்தின் கீழ் மரம் நடும் நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் மன்சுக் மாண்டவியா, தனது நாடாளுமன்ற சகாக்களுடன் இணைந்து, மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். இதில் மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு கிரண் ரிஜிஜு, திருஅர்ஜுன் ராம் மேக்வால், திருமதி ரக்ஷா நிகில் காட்சே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், மீராபாய் சானு, ரவி தாஹியா, யோகேஷ் கதுனியா போன்ற பிரபல விளையாட்டு வீரர்களும் இந்த பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மாண்டவியா,10,000 க்கும் மேற்பட்ட 'மை பாரத்' இளம் தன்னார்வலர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார். நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர்  அரசியலமைப்பு சட்டத்தை புரிந்துகொண்டு அதன்படி நடக்க உறுதியேற்கவேண்டும் என்று கூறினார். புதிய இந்தியாவில் இளம் தலைமுறையினர் வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை நோக்கி  பயணிக்கவேண்டும்  என்று வலியுறுத்தினார்.

மேலும்  விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076822

*******

TS/VS/KV/RR


(Release ID: 2076890) Visitor Counter : 17