தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 6

55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ-இன்ராஜ் கபூர் நூற்றாண்டு விழாவில் ரன்பீர் கபூர் கலந்துகொண்ட சிறப்பு அமர்வு

புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ),  ராஜ் கபூரின் பேரன் ரன்பீர் கபூர் மற்றும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ராகுல் ராவல் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு அமர்வை நடத்தியது. இதில் ஜாம்பவான் ராஜ் கபூருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அமர்வு இந்திய சினிமாவுக்கு ராஜ் கபூரின் பங்களிப்பு, அவரது திரைப்படங்கள் ஏற்படுத்திய  நீடித்த தாக்கம் மற்றும் அவரது படைப்புகளின் நீடித்த மரபு பற்றிய வசீகரிக்கும் ஆய்வாக இருந்தது.

 

ரன்பீர் கபூர், தனது தாத்தாவின் அசாதாரண செல்வாக்கைப் பிரதிபலித்தார். ராஜ் கபூரின் படங்கள் காலத்தையும் எல்லைகளையும் கடந்தவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். தனது தாத்தாவின் படைப்புகளான ஆவாரா, மேரா நாம் ஜோக்கர் மற்றும்ஸ்ரீ 420 போன்றவை எவ்வாறு உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (என்.எஃப்.டி.சி), இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் (என்.எஃப்.ஏ.ஐ) மற்றும் திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ராஜ் கபூரின் படங்களை மீட்டெடுப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் ரன்பீர் எடுத்துரைத்தார். ராஜ் கபூரின் பத்து படங்கள் ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை 2024 டிசம்பரில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அமர்வில் திரைப்படத் தயாரிப்பு, நடிப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் திரைப்படங்களின் வளர்ந்து வரும் பங்கு பற்றிய விவாதங்களும் நடைபெற்றன.

 

இந்த அமர்வில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் விழா இயக்குநருமான திரு சேகர் கபூர், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் மற்றும் என்.எஃப்.டி.சி-இன் நிர்வாக இயக்குநர் திரு பிருதுல் குமார் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) திருமிகு விருந்தா தேசாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076652

TS/BR/KR

(Release ID: 2076652)

 

 

***

iffi reel

(Release ID: 2076776) Visitor Counter : 5