தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ-இல் 'திரைப்படங்கள் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை' பற்றி மனிஷா கொய்ராலா மற்றும் விக்ரமாதித்யா மோட்வானே ஆகியோர் வெளிப்படையாக விவாதித்தனர்
'ஹீராமண்டி' கதாபாத்திரமான மல்லிகாஜானுக்கும், 'உதான்', 'லூடேரா' மற்றும் 'சேக்ரட் கேம்ஸ்' போன்ற புகழ்பெற்ற படங்களின் இயக்குநருக்கும் இடையிலான சந்திப்பு 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) நடந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து திரைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட 'திரைப்படங்கள் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை' என்ற அறிவார்ந்த 'உரையாடல்' அமர்வில் திரைப்படத் துறை ஜாம்பவான்கள் இருவரும் பங்கேற்றனர்.
ஓடிடி தளங்களில் திரைப்படம் அல்லது தொடர் வெளியிடுவதற்கும்திரையரங்கத்தில் திரைப்படங்கள் திரையிடுவதற்கும் என இரண்டிற்கும் நடிகர்களிடமிருந்து ஒரே அளவிலான முயற்சி, தயாரிப்பு, நேர்மை மற்றும் மனநிலை தேவை என்று மனிஷா கொய்ராலா பகிர்ந்து கொண்டார். "எனது முப்பது வருட திரைத் தொழில் வாழ்க்கையில், ஹீராமண்டி நான் பணியாற்றிய மிகப்பெரிய படைப்பு" என்று அவர் கூறினார். "நான் திரையரங்குகளுக்குச் செல்வதை விரும்புகிறேன், ஆனால் வீட்டில் உட்கார்ந்து நல்ல உள்ளடக்கத்தைப் பார்ப்பதையும் ரசிக்கிறேன்" என்று அவர் இரண்டு அனுபவங்களுக்குமான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
ஓடிடி நிகழ்ச்சிகளில் பணியாற்ற நடிகர்கள் இன்னும் தயங்குகிறார்களா என்று கேட்டபோது, இது குறித்து தொழில்துறையில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மனிஷா வெளிப்படையாக பதிலளித்தார் . "புதிய மற்றும் அறிமுகமில்லாத எதுவும் ஆரம்பத்தில் பெரும்பாலும் சந்தேகத்தை சந்திக்கிறது," என்று அவர் விளக்கினார். "ஆனால் நல்ல முடிவுகள், அதைத் தழுவ மக்களை ஊக்குவிக்கின்றன." ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் குறித்து திரையுலகில் இன்னும் அச்சம் இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், "இது சில தலைமுறைகளில் மறைந்துவிடும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டு வடிவங்களிலும் தனது அனுபவத்தைப் பற்றி பேசிய விக்ரமாதித்யா மோட்வானே, "நான் வகைகளை உடைப்பதை ரசிக்கிறேன். எனது முதல் நான்கு படங்கள் அனைத்தும் திரையரங்குகளுக்கானவை. ஸ்ட்ரீமிங் தளங்கள் கொஞ்சம் அதிக சுதந்திரத்தை அளிக்கின்றன. ஓ.டி.டி தளங்கள் அதிக சுதந்திரத்தை வழங்குகின்றன. திரையரங்கு வெளியீடுகள், பட்ஜெட், நீளம் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் வெகுஜன மக்களுக்கு ஏற்ற கதையாக இருக்க வேண்டும். இருப்பினும், தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076641
TS/BR/KR
(Release ID: 2076641)
***
(Release ID: 2076768)
Visitor Counter : 12