தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இது எப்போதும் படத்தின் வெற்றிக்குப் பங்களிப்பதைப் பற்றியது; படத்தில் இருந்து எனக்கு கிடைப்பதைப் பற்றியது அல்ல – நித்யா மேனன்
தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிப்புக் கலை குறித்த தனது ஆழமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கோவாவின் பனாஜியில் உள்ள கலா அகாடமியில் 'பாத்திரமும் நடிகரும்: நுணுக்கத்தின் திறன்' என்ற உரையாடல் அமர்வில் அவர் உரையாற்றினார்.
திருச்சிற்றம்பலம், ஓகே கண்மணி போன்ற படங்களில் நுணுக்கமான நடிப்புக்காக அறியப்பட்ட தேசிய விருது பெற்ற அவர், மென்னயமான வெளிப்பாட்டின் சக்தி, உணர்ச்சியின் நம்பகத்தன்மைக்கான முக்கியத்துவம், சிக்கலான, நிஜ உலக கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் வரும் சவால்கள் பற்றி பேசினார்.
படங்களைத் தேர்ந்தெடுக்கும் தனது செயல்முறையையும் கடந்த காலத்தில் மேலோட்டமான தனது கதாபாத்திரங்களுக்காக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும்எடுத்துக்காட்டி உரையைத் தொடங்கினார். முறையான நடிப்பு அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்றாலும், உலகை கவனிப்பது, காட்சிகளை உள்வாங்குவது, கதாபாத்திரங்களுடன் உள்ளுணர்வாக இணைவது ஆகியவற்றை அவர் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது உணர்ச்சி ரீதியான இணைப்பைப் பற்றியது, தனிப்பட்ட அனுபவம் அவசியமில்லை என்பதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு தாயை சித்தரிப்பதற்கு வாழ்க்கை அனுபவத்தை விட இரக்கமும் உணர்ச்சிப் பகிர்வும் தேவைப்படுகிறது.
இறுக்கமும் நம்பிக்கையின்மையும் ஒரு நடிகரின் நடிப்பைத் தடுக்கிறது என்று அவர் கூறினார். தன்னம்பிக்கையைப் போலவே மக்களுக்கும் அனுபவங்களுக்கும் நெகிழ்வுத்தன்மையும் திறந்த மனப்பான்மையும் முக்கியம் என்று அவர் மேலும் கூறினார். வேகமான காலஅட்டவணையின் அழுத்தம் இல்லாமல் நடிகர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் வெளிப்படுத்த அமைதியான சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஒரு நடிகரின் உள்ளுணர்வுகள் அல்லது குணாம்சம் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசிய அவர், "முன்பு எனக்கு சோகத்தை வெளிப்படுத்துவது அல்லது அழுவது எளிதாக இருந்தது, ஏனெனில் எனக்கு அவ்வளவு வேதனை இருப்பதாக நான் நம்பினேன். சில உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்தன. ஷாட் அல்லது காட்சி முடிந்ததும் நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். இன்று, நான் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு அழுவது கடினமாக இருக்கிறது. ஒருவேளை நான் வளர வளர மகிழ்ச்சியான நபராக மாறியிருக்கிறேன் என நினைக்கிறேன். உணர்ச்சி மீதான நம்பகத்தன்மைதான் மிகவும் முக்கியமானது, தனது உணர்ச்சிகளின் நேர்மையே தனது வேலையை இயக்குகிறது, ஒரு பாத்திரத்தைச் சுற்றியுள்ள வெளிப்புற சூழ்நிலைகள் அல்ல என்ற கருத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
பல ஆண்டுகளாக சினிமாவில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள், அதிக மரியாதை ஆகியவற்றுடன் நடிகைகளை ஏற்றுக்கொள்வதாக தொழில்துறை மாறியுள்ளது என்று அவர் கூறினார். நிறைவாக, ஒரு திரைப்படத்தின் நோக்கம் அதன் பார்வையாளர்களின் நனவைத் தூண்டுவதே என்பதை நித்யா வலியுறுத்தினார். "ஒரு திரைப்படம் உணர்வுபூர்வமாகவோ அல்லது அறிவுப்பூர்வமாகவோ ஈடுபடத் தவறினால், அது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
*****
(Release ID: 2075676)
TS/SMB/RS/KR
(Release ID: 2075942)
Visitor Counter : 9