பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 21 NOV 2024 9:27PM by PIB Chennai

கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.

இந்தியா மற்றும் கயானா இடையேயான நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். நாட்டின் மிக உயர்ந்த விருதை தனக்கு வழங்கியதற்காக கயானா மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்கும் கயானாவுக்கும் இடையே புவியியல் ரீதியான தூரம் இருந்தாலும், பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை இரு நாடுகளையும் நெருக்கமாக இணைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் பொதுவான மனிதகுலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இந்த மதிப்புகள் உள்ளடக்கிய பாதையில் முன்னேற உதவியது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் தாரக மந்திரமான 'மனிதநேயத்திற்கு முன்னுரிமை', பிரேசிலில் சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாடு உட்பட, உலகளாவிய தெற்கின் குரலை விரிவுபடுத்த ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். விஸ்வபந்துவாக மனிதகுலத்திற்கு சேவை செய்ய இந்தியா விரும்புகிறது என்றும், இந்த முக்கிய சிந்தனை உலகளாவிய சமூகத்தை நோக்கிய அதன் அணுகுமுறையை வடிவமைத்துள்ளது, அங்கு பெரிய அல்லது சிறிய நாடுகள் அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

உலக அளவில் அதிக முன்னேற்றம் மற்றும் வளத்தைக் கொண்டு வர பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதன் மூலம் இளைஞர்களின் திறனை முழுமையாக உணர முடியும் என்றார். கரீபியன் பகுதிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை தெரிவித்த பிரதமர், இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்தார். இந்திய-கயானா வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க கண்டத்திற்கும் இடையே வாய்ப்புகளுக்கான பாலமாக கயானா மாறும் என்று கூறினார். "நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், நிகழ்காலத்தை மேம்படுத்த வேண்டும், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்" என்று கயானாவின் முன்னாள் அதிபர் திரு சேட்டி ஜெகன் கூறியதை மேற்கோள் காட்டி அவர் தனது உரையை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு வருகை தருமாறு கயானா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075683


(Release ID: 2075683)

 

 

TS/BR/KR

***


(Release ID: 2075822) Visitor Counter : 7