தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓ.டி.டி தளம் ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் தொடங்கப்பட்டது
கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் ஓ.டி.டி தளமான 'வேவ்ஸ்' ஐ கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார். தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஓ.டி.டி (ஓவர்-தி-டாப்) இயங்குதள துறையில் கால் பதித்துள்ளது. இது பாரம்பரிய உள்ளடக்கம் மற்றும் தற்கால நிரலாக்கம் ஆகியவற்றின் செழுமையான கலவையை வழங்குவதோடு நவீன டிஜிட்டல் போக்குகளையும் ஏற்கிறது. அதே வேளையில் கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதையும் இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராமாயணம், மகாபாரதம், சக்திமான் மற்றும் ஹம் லோக் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைக் கொண்ட களஞ்சியத்துடன், இந்தியாவின் கடந்த காலத்தின் கலாச்சார மற்றும் உணர்வு ரீதியான தொடர்புகளைத் தேடும் பார்வையாளர்களை இந்தத் தளம் ஈர்க்கிறது. கூடுதலாக, இது செய்திகள், ஆவணப்படங்கள் மற்றும் பிராந்திய உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. இது உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. அதன் பல தசாப்த கால பாரம்பரியம் மற்றும் தேசிய நம்பிக்கையை மேம்படுத்துவதன் மூலம், தூர்தர்ஷனின் ஓ.டி.டி தளம் பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் நவீன ஸ்ட்ரீமிங்கிற்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, இளைஞர்களையும் பழைய தலைமுறையினரையும் ஒரே மாதிரியாகச் சென்றடைகிறது.
இந்தி, ஆங்கிலம், பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, அசாமி ஆகிய 12க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச கண்ணோட்டத்துடன் இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்தியாவின் பிரத்யேக கதைகளுடன் 'வேவ்ஸ்' ஒரு குறிப்பிடத்தக்க ஒ.டி.டி-ஆக செயல்படும். இது வீடியோ ஆன் டிமாண்ட், இலவச கேமிங், ரேடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி ஸ்ட்ரீமிங், 65 நேரலை தொலைக்காட்சி சேனல்கள், காணொலி மற்றும் கேமிங் உள்ளடக்கத்திற்கான பல பயன்பாட்டு ஒருங்கிணைப்புகள் மற்றும் மின்னணு வர்த்தக தளம் மூலம் இணையவழி ஷாப்பிங் ஆகியவற்றை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2075273®=1&lang=1
***
TS/BR/KR
(रिलीज़ आईडी: 2075403)
आगंतुक पटल : 198