பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 20 NOV 2024 8:09PM by PIB Chennai

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, அர்ஜென்டினா குடியரசு அதிபர் திரு ஜேவியர் மைலேயை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பு இதுவாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அதிபர் மிலேய் வாழ்த்து தெரிவித்தார். அதிபர் மிலே பதவியேற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் ஆளுகை என்ற பொருள் குறித்து சுவாரஸ்யமாக விவாதித்ததுடன், இந்தத் துறையில் தத்தமது அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டனர். கடந்த சில ஆண்டுகளில் இரு துடிப்பான ஜனநாயகங்களுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். அர்ஜென்டினாவின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் ஆழம் அசாதாரணமானதாக கருதப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகள், பாதுகாப்பு, லித்தியம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட முக்கிய தாதுக்கள், சிவில் அணுசக்தி, விண்வெளி, விவசாயம், அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை இது உள்ளடக்கியது. அர்ஜென்டினா மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு தலைவர்களும் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்ததுடன், இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த நெருக்கமாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2075226)

 


(Release ID: 2075378) Visitor Counter : 11