ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டுவசதி தினம் 2024 கொண்டாடப்படுகிறது: பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் கிராமப்புற, இந்தியாவிற்கு அதிகாரமளித்தல்

Posted On: 20 NOV 2024 6:13PM by PIB Chennai

பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் 8-வது ஆண்டு விழாவை, வீட்டு வசதி தினம் 2024 என மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. பிரதமரின் இந்த தொலைநோக்குத் திட்டம் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று தொடங்கப்பட்டது.  இந்த முக்கியமான திட்டம் அனைவருக்கும் வீட்டு வசதி என்பதை அடைவதற்கு அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. குடிசை வீடுகளிலும் சேதமடைந்த வீடுகளிலும், வசிப்போருக்கு அத்தியாவசிய வசதிகளுடன் உறுதியான வீடுகளை 2029 மார்ச் மாதத்திற்குள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  2024-29 நிதியாண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கு ரூ.3,06,137 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2024-25-நிதியாண்டுக்கு ரூ.54,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் குறைந்த பட்ச அளவு 25 சதுர மீட்டராக இருக்கும்.  சமவெளிப் பகுதியில் ரூ.1.20 லட்சமும். வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களுக்கு ரூ.1.30 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். சுமார் 10 லட்சம் பயனாளிகள்  இந்த ஆண்டு, முதல் தவணையை நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

பயனாளிகள் பற்றிய  ஆய்வை 2024 நவம்பர் 30-க்குள் முடித்து தகுதியுள்ள குடும்பங்களுக்கு 2024 டிசம்பர் 31-க்குள் வீடு கட்டும் அனுமதியை வழங்குமாறு  மாநிலங்களுக்கு  ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வீடுகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

ஆவாஸ் + 2024 செயலி  வெளிப்படையான  பயனாளி அடையாளத்தை   உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075171

***

AD/SMB/KPG/DL


(Release ID: 2075232) Visitor Counter : 34