பிரதமர் அலுவலகம்
நார்வே பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
19 NOV 2024 6:06AM by PIB Chennai
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே நார்வே பிரதமர் திரு. ஜோனஸ் காஹ்ர் ஸ்டோரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (இந்தியா-EFTA-TEPA) கையெழுத்தானது என்பது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், நார்வே உள்ளிட்ட இஎஃப்டிஏ நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
நீலப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், சூரிய மற்றும் காற்றாலை திட்டங்கள், புவி வெப்ப எரிசக்தி, பசுமை கப்பல் போக்குவரத்து, கார்பன் கிரகிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு, மீன்வளம், விண்வெளி மற்றும் ஆர்க்டிக் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இருதரப்பு விவாதங்கள் கவனம் செலுத்தின.
பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
***
(Release ID: 2074438)
TS/PKV/RR/KR
(Release ID: 2074553)
Visitor Counter : 16