புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனையை கௌரவிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பத்தை மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்
Posted On:
15 NOV 2024 9:52AM by PIB Chennai
ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் திரு சுதர்சன் பட்நாயக்கின் கலைப்படைப்புகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்.
"புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 200 ஜிகாவாட் மைல்கல்லை தாண்டிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையிலான மணற்சிற்பம்! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir " என்று மத்திய அமைச்சர் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'பஞ்சாமிர்த' இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா அக்டோபரில் 200 ஜிகாவாட் மைல்கல்லை எட்டியது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுவாக்கில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்குடன் ஒத்துப்போகிறது.
********
TS/SMB/KV
(Release ID: 2073614)
Visitor Counter : 31