தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கு பத்து படங்கள் போட்டியிடுகின்றன

 

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (.எஃப்.எஃப்.) 55-வது பதிப்பு மதிப்புமிக்க .சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான பரிந்துரைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது (திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஆடியோவிஷுவல் கம்யூனிகேஷன் சர்வதேச கவுன்சில் (.சி.எஃப்.டி) பாரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படும் உலகளாவிய விருதாகும். இந்தப் பாராட்டு மகாத்மா காந்தியின் கொள்கைகளை குறிப்பாக அகிம்சை, சகிப்புத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய திரைப்படங்களைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் அமைதியை ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டு, பத்து குறிப்பிடத்தக்க படங்கள் விருதுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பிராந்தியங்கள், கலாச்சாரங்கள் மற்றும் வகைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆனால், காந்திய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பால் ஒன்றுபட்டுள்ளன. இசபெல் டேனல் (FIPRESCI - சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர்), செர்ஜ் மைக்கேல் (CICT-ICFT இன் துணைத் தலைவர்), மரியா கிறிஸ்டினா இக்லெசியாஸ் (யுனெஸ்கோவின் கலாச்சாரத் துறை திட்டத்தின் முன்னாள் தலைவர்), டாக்டர் அகமது பெட்ஜாவி (அல்ஜியர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குநர்), Xueyan Hun ஜூயியான் ஹுன்  (படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புக்கான தளம், CICT-ICFT இளைஞர் கிளை) ஆகிய முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு புகழ்பெற்ற நடுவர் குழு, இந்தத் திரைப்படங்களை அவற்றின் நெறிமுறை, கலை நேர்த்தி மற்றும் பார்வையாளர்களை, குறிப்பாக இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும், கற்பிப்பதற்குமான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும்.

ஐசிஎப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம் 2024-க்கான பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள்:

ஸ்வீடன் திரைப்படமான கிராசிங், ஈரானிய திரைப்படமான ஃபார் ராணா, ஹங்கேரிய திரைப்படமான ஃபெகெடே பாண்ட், கம்போடிய திரைப்படமான ரென்டஸ்-வோஸ் அவெக் போல் பாட், லாவோஸின் சாட்டு- முயல் ஆண்டு, தென்னாப்பிரிக்க திரைப்படமான டிரான்ஸ்அமேசோனியா, டென்மார்க் நாட்டின் திரைப்படமான அன்சிங்கபிள், வங்க மொழித் திரைப்படமான அமர் பாஸ், அசாமிய மொழி திரைப்படமான ஜூய்பூல், துஷார் ஹிரானந்தனி இயக்கியுள்ள ஸ்ரீகாந்த் ஆகியவை இந்தப் பதக்கத்திற்கான போட்டியில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072716

***

PKV/AG/KV

 

iffi reel

(Release ID: 2072759) Visitor Counter : 70