ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பிலான 12 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
12 NOV 2024 4:19PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலைமையிலான 10-வது வழிகாட்டுக் குழு, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் ரூ.13.3 கோடி மதிப்பிலான 12 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நீடித்த மற்றும் நவீன ஜவுளி, கலவைகள் போன்ற முக்கிய பகுதிகளில் ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐ.ஐ.டி., என்.ஐ.டி., சி.ஆர்.ஆர்.ஐ., உள்ளிட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இந்த இயக்கத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஆராய்ச்சி திட்டங்களின் எண்ணிக்கை தற்போது 168 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 509 கோடி ரூபாய் ஆகும்.
இந்த இயக்கத்தின் கீழ் புதிய அறிவுசார் சொத்துரிமை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆராய்ச்சித் திட்டங்களில் தொழில்துறை தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று திரு கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் என்பது ஜவுளி அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது உள்ளூர் தொழில்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
----
(Release ID 2072728)
IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2072738)
आगंतुक पटल : 123