குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் 2024 நவம்பர் 12 அன்று லூதியானாவுக்குச் செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2024 2:20PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு நாளை (2024 நவம்பர் 12 ) ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.

லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பருவ நிலை மாற்றம், எரிசக்தி மாற்றம், வேளாண் முறைகள் மாற்றம் தொடர்பான  சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

லூதியானாவில் உள்ள சாத் பால் மிட்டல் பள்ளியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசுத் துணைத்தலைவர் அங்கு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுவார்.

***

(Release ID: 2072352)

PLM/RS/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2072376) வருகையாளர் எண்ணிக்கை : 97
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada , Malayalam