வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அரசு மின்னணு சந்தை (GeM) 170 விதை வகைகளை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது
Posted On:
04 NOV 2024 11:36AM by PIB Chennai
தரமான வேளாண் மற்றும் தோட்டக்கலை விதைகள் கிடைப்பதை எளிதாக்கும் நோக்கில், அரசு 170 விதை வகைகளை புனரமைத்து இணையதளம் மூலமாக மின்னணு சந்தையில் (GeM) அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பயிர் பருவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தப் புதிய வகைகளில் கிட்டத்தட்ட 8,000 விதை ரகங்கள் உள்ளன. அவை மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற ஆளும் அமைப்புகளால், நாடு முழுவதும் கிடைப்பதற்காக வாங்கப்படலாம்.
மாநில விதை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு உருவாக்கப்பட்ட விதை வகைகள், மத்திய அரசின் தற்போதுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவையான அளவுகோல்களை உள்ளடக்கி, விதை கொள்முதலுக்கென தயாராக உள்ள கட்டமைப்பை வழங்குவதுடன், கொள்முதல் செய்வதற்கான முழு செயல்முறையையும் எளிதாக்குகின்றன.
இந்த புதிய வகைகளை வெளியிடுவது, இணையதளம் மூலம் ரகம் அடிப்படையிலான கொள்முதலை ஊக்குவிப்பதற்கான அரசு மின்னணு சந்தையின் பரந்துபட்ட உத்தியின் ஒரு பகுதியாகும். செயல்திறனை அதிகரிப்பதை வலியுறுத்தி, ரகம் அடிப்படையிலான விதை கொள்முதல் என்பது டெண்டர் நடைமுறைகளில் எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைப்பது, அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைத் தூண்டுவது, அதே நேரத்தில் நாடு முழுவதும் விற்பனையாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"இந்த புதிய விதை ரகங்களைப் பயன்படுத்தவும், அரசாங்க டெண்டர்களில் சுதந்திரமாக பங்கேற்க, தங்கள் விருப்பங்களை பட்டியலிடவும், விற்பனையாளர்களை நாங்கள் அழைக்கிறோம். தரமான விதைகளை, குறைந்த செலவில் கொள்முதல் செய்வதற்கு, இந்த புதிய வகைகளைப் பயன்படுத்த விதை நிறுவனங்கள் / மாநில அமைப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்று அரசு மின்னணு சந்தை துணை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ரோலி கரே கூறினார்
----
(Release ID: 2070521)
TS/MM/KPG/KR
(Release ID: 2070568)
Visitor Counter : 60