உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உட்பட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/சிஏபிஎஃப்-கள்/சிபிஓக்கள் ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 31 OCT 2024 10:17AM by PIB Chennai

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/ மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்)/ மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான  'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்'  அறிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், பின்வரும் நான்கு துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர் / அதிகாரிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்தப்  பதக்கம் வழங்கப்படுகிறது:

(i) சிறப்பு  நடவடிக்கை.

(ii) புலனாய்வு.

(iii) நுண்ணறிவு.

(iv) தடய அறிவியல்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை  அமைச்சர் திரு  அமித் ஷா வழிகாட்டுதல் படி  தொடங்கப்பட்ட 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அனைத்து காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிக்கும்

'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' 2024, பிப்ரவரி 1  தேதியிட்ட உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இது காவல் படைகள், பாதுகாப்பு அமைப்பு, புலனாய்வு பிரிவு / கிளை / மாநிலத்தின் சிறப்புப் பிரிவு / யூனியன் பிரதேசங்கள் / சிபிஓக்கள் / சிஏபிஎஃப் கள் / தேசிய பாதுகாப்பு   காவலர் (என்எஸ்ஜி) / அசாம் ரைபிள்ஸ் உறுப்பினர்கள், தடய அறிவியல் (மத்திய/மாநில / யூனியன் பிரதேசங்கள்) ஆகிய துறைகளில் சிறப்பான செயல்பாடுகள், புலனாய்வில் சிறப்பான சேவை, அசாதாரணமான செயல்திறன் மற்றும் துணிச்சலான புலனாய்வு சேவை, தடய அறிவியல் துறையில் பணியாற்றும் அரசு விஞ்ஞானிகளின் பாராட்டத்தக்க பணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இப்பதக்கம் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவில் 7 பேரும் - திருமதி வந்திதா பாண்டே (ஏஎஸ்பி) ,  திருமதி எம். அம்பிகா (ஆய்வாளர்), திருமதி கே. மீனா (எஸ்பி), திரு என். உதயகுமார்  (ஆய்வாளர்), திரு சி. கார்த்திகேயன் (ஏசிபி), திரு சி. நல்லசிவம் (ஏசிபி),  திரு எஸ். பாலகிருஷ்ணன்  (ஆய்வாளர்), தடயஅறிவியல் பிரிவில் ஒருவரும்- திரு சுரேஷ் நந்தகோபால் (துணை இயக்குநர்) என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' பெறுகின்றனர்

விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். 

***

SMB/DL




(Release ID: 2069833) Visitor Counter : 35