பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பல்வேறு சுகாதார நிறுவனங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தியாவின் முதலாவது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 11 துணை சுகாதார நிறுவனங்களில் ட்ரோன் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் முன்முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனளிக்கும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் யு-வின் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மருத்துவ சாதனங்கள் மற்றும் மொத்த மருந்துகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ஐந்து திட்டங்களை பிரதமர் தொட

Posted On: 28 OCT 2024 12:47PM by PIB Chennai

 

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் ஒன்பதாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று நண்பகல் மதியம் 12:30 மணியளவில், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

முன்னோடித் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இது உதவும்.

நாடு முழுவதும் தரமான சுகாதார சேவைகளை வழங்க வேண்டும் என்பது பிரதமரின் தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் பல்வேறு சுகாதார நிறுவனங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டின் முதலாவது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் பஞ்சகர்மா மருத்துவமனை, மருந்து உற்பத்திக்கான ஆயுர்வேத மருந்தகம், விளையாட்டு மருத்துவப் பிரிவு, மத்திய நூலகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தொழில் காப்பக மையம் மற்றும் 500 இருக்கைகள் கொண்ட அரங்கு ஆகியவை அடங்கும். மத்தியப் பிரதேசத்தில் மண்ட்சௌர், நீமுச், சியோனி ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர், மேற்கு வங்கத்தில் கல்யாணி, பீகாரில் பாட்னா, உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் கவுகாத்தி மற்றும் புதுதில்லியில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்களை அவர் தொடங்கி வைக்கிறார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவையும், ஒடிசா மாநிலம் பர்கரில் தீவிர சிகிச்சைப் பிரிவையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்புரி, ரத்லம், காண்ட்வா, ராஜ்கர், மண்ட்சௌர் ஆகிய இடங்களில் ஐந்து செவிலியர் கல்லூரிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 21 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்கள் ஆகியவை அடங்கும்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஈஎஸ்ஐசி மருத்துவமனையைத் தொடங்கி வைப்பதுடன், ஹரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத், கர்நாடகாவில் பொம்மசந்திரா,நரசாபூர், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், உத்தரப் பிரதேசத்தில் மீரட், ஆந்திரப் பிரதேசத்தில் அச்சுதபுரம் ஆகிய இடங்களில் ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் சுமார் 55 லட்சம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு சுகாதார பலன்களை அளிக்கும்.

பல்வேறு துறைகளில் சேவை வழங்கலை மேம்படுத்த, தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் பிரதமர் பெரும் ஆதரவு அளித்து வருகிறார். ட்ரோன் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டில், சுகாதார சேவையை மேலும் அணுகும் வகையிலும், சேவைகளை மேம்படுத்தும் வகையில், 11 துணை நிலை சுகாதார நிறுவனங்களில் ட்ரோன் சேவைகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். உத்தராகண்டில் ரிஷிகேஷ், தெலங்கானாவில் பிபிநகர், அசாமில் கவுகாத்தி, மத்திய பிரதேசத்தில் போபால், ராஜஸ்தானில் ஜோத்பூர், பீகாரில் பாட்னா, இமாச்சல பிரதேசத்தில் பிலாஸ்பூர், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி, சத்தீஸ்கரில் ராய்ப்பூர், ஆந்திராவில் மங்களகிரி ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மற்றும் மணிப்பூரில் இம்பாலில் உள்ள  ரிம்ஸ் ஆகியவை   இவற்றில் அடங்கும்.. விரைவான மருத்துவ சேவையை வழங்க உதவும் வகையில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவசர மருத்துவ சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

யு-வின் தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். தடுப்பூசி செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது பயனளிக்கும். தடுப்பூசியால் தடுக்கப்படக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர் காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை இது உறுதி செய்யும். மேலும், தொடர்புடைய மற்றும் சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான இணைய தளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இது தற்போதுள்ள சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளமாக செயல்படும்.

நாட்டில் சுகாதார சூழல் அமைப்பை மேம்படுத்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் சோதனை உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கோதபட்னாவில் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ஒடிசா மாநிலம் கோர்தா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான இரண்டு மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். மருத்துவ சாதனங்களுக்காக அகமதாபாத்தில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொத்த மருந்துகளுக்காக தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாவர மருந்துகளுக்காக அசாமில் குவஹாத்தியில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பாக்டீரியா எதிர்ப்பு வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாப் மொகாலியில் நான்கு சிறப்பு மையங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

நான்கு ஆயுஷ் திறன் மையங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான திறன் மையம்தில்லி ஐஐடியில் ரசௌதிகளுக்காக புத்தொழில் ஆதரவு மற்றும் நிகர பூஜ்ஜிய நீடித்த தீர்வுகள், மேம்பட்ட தொழில் நுட்ப தீர்வுகளுக்கான நீடித்த ஆயுஷ் திறன் மையம் லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆயுர்வேதத்தில் அடிப்படை மற்றும் மாற்று ஆராய்ச்சிக்கான திறன் மையம், புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவத்திற்கான திறன் மையம் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.

சுகாதாரத் துறையில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முன்முயற்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், குஜராத்தில் வாபி, தெலங்கானாவின் ஹைதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, ஆந்திரப் பிரதேசத்தில் காக்கிநாடா, இமாச்சலப் பிரதேசத்தில் நலகர் ஆகிய இடங்களில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், ஐந்து திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தப் பிரிவுகள் முக்கியமான மொத்த மருந்துகளுடன் உடல் உடல் மாற்று உபகரணங்கள், தீவிர சிகிச்சை உபகரணங்கள் போன்ற உயர்தர மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும்.

குடிமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "நாட்டின் இயற்கை பரிசோதனை இயக்கம்" என்ற நாடு தழுவிய இயக்கத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார் அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்த மாநிலத்தின் குறிப்பிட்ட செயல் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இது பருவநிலைக்கு ஏற்ற சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும்.

***

TS/IR/AG/KV




(Release ID: 2068856) Visitor Counter : 54