தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிபி ஷப்த்: 24/7 செய்திகள், 1500+ நிருபர்கள், நேரலை ஊட்டங்கள் மற்றும் ஆவணக் காப்பக அணுகல்

Posted On: 24 OCT 2024 7:04PM by PIB Chennai

டிஜிட்டல் செய்தி இணையதளங்கள் இப்போது பிபி ஷப்த் போர்ட்டலில் ( https://shabd.prasarbharati.org/register) ஒரு எளிய பதிவு படிவத்தை நிரப்புவதன் மூலம் பதிவு செய்யலாம். இதன் மூலம், டிஜிட்டல் செய்தி இணையதளங்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் பிபி ஷப்த் தளத்தில் உரை, வீடியோ, படம் மற்றும் ஆடியோ வடிவத்தில் இலச்சிணை  இல்லாத உள்ளடக்கத்தைப் பெறலாம். ஊடக நிறுவனங்கள்மார்ச் 2025 வரை இந்த சேவையைக் கட்டணமின்றி பதிவுசெய்து பயன்படுத்தலாம்.

யூடியூப் அடிப்படையிலான டிஜிட்டல் செய்தி போர்ட்டல்களுக்கு சந்தா அளவுகோல்கள்:

ஆங்கிலம் / இந்தி மொழியில் உள்ள போர்ட்டல்களுக்கு குறைந்தபட்சம் 1,00,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும்.

பிராந்திய செய்தி இணையதளங்களுக்கு குறைந்தபட்சம் 50,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும்.

யூடியூப் கணக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த போர்ட்டல் ஓராண்டு காலம்  இருந்திருக்க வேண்டும்.

போர்டல் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 1 வீடியோவையும், கடந்த ஒரு மாதத்தில் - விண்ணப்பிக்கும் நேரத்தில் - குறைந்தது 5 வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

டிஜிட்டல் விவரக்குறிப்பு டிஜிட்டல் செய்தி இணையதளங்களால் நிரப்பப்படலாம், பின்னர் அது பிரசார் பாரதியால் சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை முடிந்த பின்னரே, டிஜிட்டல் செய்தி போர்ட்டல்கள் பிபி ஷப்த் போர்ட்டலில் பதிவு செய்ய முடியும்.

பிபி - ஷப்த் (பிரசார் பாரதி-ஒளிபரப்பு மற்றும் பரப்புதலுக்கான பகிரப்பட்ட ஆடியோ-காட்சிகள்) என்பது  வீடியோ ஆடியோ, உரை, புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தினசரி செய்தி ஊட்டங்களை ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செய்திப் பகிர்வு சேவையாக மார்ச் 13, 2024 அன்று தொடங்கப்பட்டது.

1500-க்கும் அதிகமான  நிருபர்கள், செய்தி தொடர்பாளர்கள், பகுதிநேர  நிருபர்கள் என வலுவான வலைப்பின்னலைப்  பயன்படுத்தி, 24 மணி நேரமும் செயல்படும் 60 பிரத்யேக செய்தித் தொகுப்பு மேசைகளின் ஆதரவுடன், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சமீபத்திய செய்திகளை பிபி - ஷப்த் வழங்குகிறது. விவசாயம், தொழில்நுட்பம், வெளியுறவு, அரசியல் நிகழ்வுப் போக்குகள்  போன்ற 50 க்கும் அதிகமான செய்தி வகைகளை உள்ளடக்கிய 1000-க்கும் அதிகமான தகவல்கள், மாநில செய்தி ப் பிரிவுகள் (ஆர்.என்.யூ) மற்றும் தலைமையகங்களிலிருந்து அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு https://x.com/PBSHABD and on Instagram at https://www.instagram.com/pbshabd/ என்ற இணைய தளத்தின் எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் பிபி - ஷப்த் கிடைக்கும்.

 

***

(Release ID: 2067861)

SMB/KR


(Release ID: 2067995) Visitor Counter : 17