பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபரை பிரதமர் சந்தித்தார்
Posted On:
22 OCT 2024 10:32PM by PIB Chennai
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை கசான் நகரில் இன்று சந்தித்தார். இந்த ஆண்டில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தனர்.
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்காக அதிபர் புதினுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றுடன் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். புதுதில்லியில் 2024 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் கூட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பலதரப்பு அமைப்புகளில், குறிப்பாக பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா-ரஷ்யா இடையேயான ஈடுபாடு குறித்து தலைவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைனில் நடந்து வரும் மோதல் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மோதல்களைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னோக்கிய வழி என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்ந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருவதுடன், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் பின்னணியில் மீள்திறனைக் காட்டுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 23-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
***
(Release ID: 2067209)
PKV/AG/KR
(Release ID: 2067254)
Visitor Counter : 22
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam