குடியரசுத் தலைவர் செயலகம்
பாரதிய ஆதிவாசி சேவை சங்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
22 OCT 2024 6:33PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (2024 அக்டோபர் 22,) பாரதிய ஆதிவாசி சேவை சங்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தக்கர் பாபா ஸ்மாரக் சதனுக்கான அவரது பயணம் ஒரு புனிதமான இடத்திற்கு செல்வது போன்றது என்று கூறினார்.
தக்கர் பாபாவின் குறிக்கோள்களுடன் பாரதிய ஆதிவாசி சேவை சங்கம் செயல்பட்டு வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பழங்குடி சமூகத்தில் நிலவும் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் மோசமான சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை களைய இது பாடுபடுகிறது என்றும், இந்த சங்கம் சிறுமிகள், பெண்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாரதிய ஆதிவாசி சேவை சங்கத்துடன் தொடர்புடையவர்கள், தக்கர் பாபாவால் நிறுவப்பட்ட பொதுச் சேவை கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்காலத்திலும் தங்கள் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து கடைபிடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
TS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2067165)
आगंतुक पटल : 81