சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மணிப்பூரில் 50 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல்; மலைப்பகுதிகளில் 902 கிமீ சாலை மேம்பாட்டுக்கு முன்னுரிமை
Posted On:
22 OCT 2024 12:16PM by PIB Chennai
மணிப்பூரில் 1026 கிலோ மீட்டர் நீளமுள்ள 50 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 902 கி.மீ நீளமுள்ள 44 திட்டங்கள் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் உள்ளன. இதில் மலைப் பகுதிகளில், 125 கி.மீ., துாரத்திற்கு, 8 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 36 திட்டங்களில், 777 கி.மீ.,க்கு ரூ.12,000 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சகத்தின் 2024-25 ஆண்டுத் திட்டத்தில், மொத்தம் 90 கி.மீ நீளத்திற்கு ரூ .1350 கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளன.
மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ், மாநிலச் சாலைகளில் மாநில அரசு முன்னுரிமை அளித்த பணிகளின் பட்டியலுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசு அளித்த முன்னுரிமைப் பட்டியலில் உள்ள 111 பணிகளில், பிஓஎஸ் விகிதாச்சாரத்தின் அடிப்படையில், 57 பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
***
TS/PKV/KV
(Release ID: 2067022)