குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 16 OCT 2024 7:02PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், "நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் பெருமளவில் பங்கு வகிக்கின்றன" என்று கூறியுள்ளார். 

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் திறன் மற்றும் புத்தாக்கமையத்திற்கான அடிக்கல்லை நாட்டிப் பேசிய அவர், நாட்டின் ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் கலாச்சார சாராம்சத்திற்கு வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன என்று கூறினார்.  வடகிழக்குப் பகுதி நமது நாட்டின் மிக முக்கியமான பகுதி என்பதை வலியுறுத்திய திரு. தன்கர், கிழக்கு நோக்கிய பார்வை மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கையைப் பாராட்டினார். இதன் விளைவாக இந்தப் பிராந்தியத்தில் தகவல் தொடர்பு, இணைப்பு மற்றும் விமான நிலையங்களின் வளர்ச்சி ஆகியவை அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அறியாமை மற்றும் தவறான விவரிப்புகள் குறித்து கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், உண்மை அடிப்படை இல்லாத தகவல்களை பொது மேடைகளில் சுதந்திரமாக அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். பாரதம் வளர்ந்து வருகிறது என்றும், அது பிரிக்க முடியாதது என்றும் கூறிய அவர், இளைஞர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கான பயணத்தில் இளைஞர்கள் மிக முக்கியமான பங்களிப்பாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள் என்று கூறி திரு தன்கர் மேலும் ஊக்குவித்தார்.

குறிப்பிட்ட துறையில் ஒரு நபரின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் மனிதவளத்திற்கு தரமான அதிநவீனத்தை அளிக்கிறது என்று கூறிய அவர்திறன் வளர்ப்பு என்பது இனி ஒரு தரம் அல்ல, அது நமது தேவை என்று கூறினார்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்பட்டதையும், ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், கிராமங்கள் மற்றும் புறநகர் நகரங்கள் திறன் மையங்களின் மையமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேகாலயாவில் தனது அனுபவம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கூறுகையில், "சொர்க்கம் இருந்தால் அது இந்தியாவில் உள்ளது, சொர்க்க ஆவி இருந்தால் அது மேகாலயாவில் உள்ளது" என்றார். மேகாலயாவின் பொருளாதாரத்தை சுற்றுலாவை மட்டுமே இயக்க முடியும் என்று அவர் உறுதிபடக் கூறினார். மேகாலயாவுக்கு இயற்கை அபரிமிதமான பரிசாக அளித்துள்ளது என்று கூறிய அவர், மனித வளத்தின் வடிவில் மிகவும்  திறமையானவர்களைக் கொண்டிருப்பதன் மூலம் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

மேகாலயா ஆளுநர் திரு. விஜயசங்கர், மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா , மேகாலயா அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

** 

PKV/DL



(Release ID: 2065585) Visitor Counter : 20