உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சரவை முடிவுகளுக்கு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

Posted On: 16 OCT 2024 6:56PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை மேற்கொண்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி  தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடுகுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மிக அதிக அளவாக குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தியிருப்பதும் மசூர் பருப்புக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தியிருப்பதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று  குறிப்பிட்டுள்ள திரு அமித் ஷா, இந்த விலை உயர்வு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு அவர்கள் வளம் பெறச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதாரர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்திருப்பதையும் அவர் வரவேற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065529

*** 

MM/KPG/DL



(Release ID: 2065575) Visitor Counter : 19