பிரதமர் அலுவலகம்
மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களை நிறுவியதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
15 OCT 2024 10:45PM by PIB Chennai
சுகாதாரம், வேளாண்மை மற்றும் நீடித்த நகரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது:
"இது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் முயற்சியில் மிக முக்கியமான முன்னேற்றம். இந்த சிறப்பு மையங்கள், நமது இளைஞர் சக்திக்கு பயனளிக்கும் என்றும், இந்தியாவை எதிர்கால வளர்ச்சிக்கான மையமாக மாற்றுவதற்கு பங்களிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.”
***
(Release ID: 2065247)
Visitor Counter : 43